கருப்பு பணத்தை மாற்ற லாரன்ஸ் உதவி செய்கிறாரா? லாரன்ஸ்க்கு இப்படி தான் பணம் வருது – கே. ராஜன்

0
187
- Advertisement -

ராகவா லாரன்ஸின் சமூக சேவை பற்றிய சர்ச்சைக்கு தயாரிப்பாளர் கே. ராஜன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். பின் இவர் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர் ஆனார். தற்போது இவர் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

இப்படி இவர் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பல சமூக சேவைகளை செய்து கொண்டு இருக்கிறார். சினிமாவையும் தாண்டி தொண்டு நிறுவனத்தின் மூலம் லாரன்ஸ் அவர்கள் பல்வேறு ஆதரவற்றோர்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறார். இதனால் இவருக்கு ஒன்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் கூட இனி யாரும் என் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வேண்டாம், உங்களால் முடிந்தவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார்.

- Advertisement -

லாரன்ஸ் சமூக சேவை:

மேலும், நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் தன் அன்னையின் பிறந்தநாளில் மாற்றம் அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறார். இந்த அறக்கட்டளையில் ராகவா லாரன்ஸ் உடன் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, கே பி ஒய் பாலா, சூர்யா, நிஷா ஆகியோரும் செயல்படுகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் ராகவா லாரன்ஸ், கே பி ஒய் பாலா இருவருமே இணைந்து ஏழை மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் கூட ஏழை பெண் ஒருவருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்திருந்தார்கள்.

கே.ராஜன் பேட்டி:

இது ஒரு பக்கம் இருக்க, இப்படி லாரன்ஸ் செய்யும் உதவி குறித்து சிலர் விமர்சித்தும், கருப்பு பணத்தை வைத்து தான் இவர் உதவி செய்கிறார் என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக பேட்டியில் தயாரிப்பாளர் கே ராஜன், எந்த ஒரு அரசியல் நோக்கமும், லாபமும் இல்லாமல் ஊனமுற்ற குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல பாதுகாக்கும் ராகவா லாரன்ஸ்க்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

-விளம்பரம்-

ராகவா லாரன்ஸ் பற்றி சொன்னது:

ராகவா லாரன்ஸ் செய்யும் தர்மம் கண்டிப்பாக கருப்பு பணம் இல்லை, எல்லாம் அவர் வருவாயில் செய்யும் தர்மமே. மேலும் வெளிநாடுகளில் இருந்து அவர் நடத்தும் அறக்கட்டளைக்கு நிதி வருகின்றது. ராகவா லாரன்ஸ் கூட சேர்ந்து இப்போது கேபிஒய் பாலா பல பல நல்ல காரியங்கள் செய்து வருகிறார். நல்லவர்களோடு நல்லவர் சேர்ந்தால் சந்தோஷம்தான் என்று கூறி இருக்கிறார்.

லாரன்ஸ் பேட்டி:

ஏற்கனவே இது தொடர்பான சர்ச்சைக்கு பேட்டியில் ராகவா லாரன்ஸ், நான் அரசியல் வருவதற்காக இதையெல்லாம் செய்கிறேன் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், போகப்போக தான் என்னுடைய அன்பை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். தேடி சென்று உதவிகளை செய்வதில் ஒருவித சந்தோசம் இருக்கிறது என்று பேசியிருந்தார். கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ஜிகர்தண்டா 2 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து லாரன்ஸ் அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Advertisement