படையப்பா படத்துல இதெல்லாம் கேவலமா இருக்கும். உண்மையை ஒப்புக்கொண்ட கே எஸ் ரவிகுமார். வீடியோ இதோ.

0
93045
padaiyappa
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் கே. எஸ். ரவிகுமார் ஒருவர். கே. எஸ். ரவிகுமார் அவர்கள் திரைப்பட இயக்குனருக்கு மட்டுமில்லாமல் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித் குமார், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளார். அதோடு இவரை சீனியர் டைரக்டர் என்று கூட சொல்லலாம். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி அடைந்து உள்ளது. இவர் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பார். இது வழக்கமான ஒன்றாக கே. எஸ். ரவிகுமார் வைத்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for rajini and k s ravikumar padaiyappa

- Advertisement -

கே. எஸ். ரவிகுமார் அவர்கள் முதலில் இயக்குனர் விக்ரமன் இடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதற்கு பிறகு தான் இவர் புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவுக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து நாட்டாமை, நட்புக்காக, அவ்வை சண்முகி, தெனாலி, படையப்பா, முத்து, வில்லன், வரலாறு, தசாவதாரம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், இவர் இயக்கிய பல படங்கள் பிளாக் பஸ்டர் தான். அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் “படையப்பா”.

இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசை அமைத்திருந்தார். ஏ எம் ரத்னம் தயாரித்து இருந்தது. படையப்பா படத்தில் ரஜினி அவர்கள் தன்னுடைய உறவினர்களால் மொத்த சொத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வருகிறார். பின் கஷ்டப்பட்டு உழைத்து பெரிய ஆளாக மாறுகிறார். ரஜினியை, நீலாம்பரி காதலிக்கிறார்.

வீடியோவில் 20 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

-விளம்பரம்-

ஆனால், ரஜினி அவர்கள் சௌந்தர்யாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் ரஜினிக்கும், நீலாம்பரிக்கும் இடையே பகை ஏற்படும். அதற்கு பிறகு தான் படம் ஹைலைட். இந்நிலையில் கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் சமீபத்தில் நடந்த போட்டியில் படையப்பா திரைப்படம் குறித்து பல சுவாரசியமான விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது,முதலில் நான் ரஜினிகாந்தை வைத்து ராணா என்ற படத்தை இயக்க முடிவு செய்தேன். ஆனால், அப்போது அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்குப் பிறகு உருவானதால் கோச்சடையான்.

அந்த படம் முழுக்க முழுக்க அணிமேஷன் மூலமாக உருவாக்கப்பட்டது. வெளிநாடுகளில் எடுக்கப்படும் அனிமேஷன் படங்கள் எல்லாம் 1000 கோடி பட்ஜெட்டில் எடுப்பார்கள். பார்க்க அழகாக இருக்கும். ஆனால், நம்ம தமிழ் பட்ஜெட் படங்கள் எல்லாம் 100 அல்லது 50 கோடி தான் பட்ஜெட் இருக்கும். அதுக்கு மேல தமிழ் சினிமாவில் பண்ண முடியாது. அப்படி படையப்பா படத்தில் ஒரு பாடலில் சின்ன குழந்தை இருந்து ரஜினிகாந்த் உருவம் வரும். அப்போது எல்லாம் அந்த அளவிற்கு பட்ஜெட் இருக்காது. ஒரு முத்து, வில்லன் படத்தில் எல்லாம் காட்டப்படும் CG work எல்லாம் கொஞ்சம் ஒரு மாதிரியா தான் இருக்கும். ஏன்னா, நம்ம தமிழ் சினிமா பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி தான் CG எடுப்பார்கள் என்று கூறினார்.

Advertisement