‘வயசாகிடுச்சினு சொல்லுமா’ ராதிகாவை மேடையில் கலாய்த்த நடிகர். வீடியோ இதோ.

0
3809
- Advertisement -

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் முதல் தற்போது இருக்கும் சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்குறார். சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வரும் ராதிகா. தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோடிஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு நடிகை ராதிகா அவர்களும், அவரது கணவர் சரத்குமார் அவர்களும் இணைந்து நடித்திருக்கும் படம் “வானம் கொட்டட்டும்”. இந்த படம் மணிரத்னம் அவர்கள் தயாரிப்பில் உருவாகி உள்ளது. மேலும், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதில் நடிகை ராதிகா, நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார்கள். பின் இவர்கள் இருவரும் மேடையில் பேசினார்கள்.

இதையும் பாருங்க : தன்னை அறிமுகப்படுத்தியவிரிடமே நித்யானந்தாவின் புத்தகத்தை கட்டியுள்ள ரஞ்சிதா. அதற்கு அவர் பதில்.

- Advertisement -

அப்போது ராதிகா அவர்கள் கூறியது, நான் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் நிறைய படங்கள் பண்ணி இருக்கேன். ஒரு முறை அவர் இயக்கத்தில் நான் இரண்டாவது படத்தில் பண்ணும் போது என்னை பரதநாட்டிய கலைஞராக நடிக்க சொன்னார். அப்ப அவர் படாத பாடுபட்டார். இப்ப நினைத்தால் கூட கஷ்டமாக இருக்கு. அந்த அளவிற்கு என்னை வைத்து பரதநாட்டிய கலைஞராக படம் எடுக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டு விட்டார். வானம் கொட்டட்டும் படத்தில் மீண்டும் அவருடன் இணைவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு.

Image result for vanam kottattum

-விளம்பரம்-

நான் விக்ரம் பிரபுவை எல்லாம் குட்டி வயதில் பார்த்தது. இப்போது அவர்களுடன் படத்தில் நடிக்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறினார். உடனே சரத்குமார் அவர்கள் அப்போ உனக்கு வயதாகிவிட்டது என்று சொல்லும்மா, என்று கிண்டலடித்தார். இதைக் கேட்டு அரங்கத்தில் உள்ள அனைவரும் சிரித்தார்கள். ராதிகாவும் ஆமா, எனக்கு வயசாயிருச்சு தான் என்று சொன்னார். இவர்கள் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் வயசானாலும் ராதிகா அவர்கள் இளமையாகத் தான் இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

Advertisement