நயன்- ராதாரவி சர்ச்சை.! நயனை பற்றி புட்டு புட்டு வைத்த கலா மாஸ்டர்.!

0
1485
nayanthara
- Advertisement -


கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி, மிலிந்த் ராவ் உட்பட திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

-விளம்பரம்-
Image result for nayanthara radha ravi

சமீபத்தில் நயன்தாரா குறித்து பேசிய ராதாரவி, நயன்தாரா நல்ல நடிகை. இவ்ளோ நாள் தம் கற்றதே பெரிய விஷயம். அவங்களை பற்றி வராத (தப்பான) செய்தியெல்லாம் இல்லை. அதையும் தாண்டி நிக்கிறாங்க. தமிழ்நாட்டு மக்கள் எல்லாத்தையும் 4 நாளுக்கு தான் ஞாபகம் வெச்சுப்பாங்க. அப்புறம் விட்ருவாங்க. நயன்தாரா பேயாகவும் நடிக்கிறாங்க, சீதாவாகவும் நடிக்கிறாங்க.

- Advertisement -

அப்போலாம் கடவுளாக நடிங்க கே.ஆர்.விஜயா போன்றவர்களை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேணும்னாலும் நடிக்கலாம். பார்த்தவுடனே கும்பிடறவங்களையும் போடலாமா, பார்த்தஉடனே கூப்பிடுறவங்களையும் போடலாம்” என ராதாரவி பேசினார். இது பலராலும் கடும் கண்டனத்திற்கு உள்ளது.

Kala

இந்த நிலையில் ராதாரவி குறித்தும், நயன்தாரா குறித்தும் பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் பேசுகையில், ராதாரவியை எனக்கு மிக நன்றாக தெரியும் நான் நடனப்பள்ளியை துவங்கிய போது அவர்தான் எனக்கு வசதிகளை செய்து கொடுத்தார்.நான் இந்த அளவுக்கு காரணம் அவர்தான் அதேபோல நயன்தாராவும் எனக்கு நன்றாகவே தெரியும் அவள் மிகவும் உதவி செய்யும் குணம் உடையவள். ஒருமுறை அவள் ஷூட்டிங்கில் இருந்த போது அவளிடம் ஒரு பெண் உதவி கேட்டு வந்தார் அப்போது எதையும் யோசிக்காமல் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்து கொடுத்தார் நயன்தாரா.

-விளம்பரம்-

நயன்தாரா குறித்து ராதாரவி பேசியதை நான் ராதாரவியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘என்ன சார் இப்படி எல்லாம் பேசி விட்டீர்களே’ என்று கேட்டேன். அதற்கு அவரோ ‘நான் எதுவும் தப்பாக சொல்லவில்லை, விளையாட்டாக சொன்னதே அனைவருமே இப்படி சீரியஸாக எடுத்துக் கொண்டார்கள். என்று பேசினார்.மேலும், ராதாரவி மதிப்பும் மரியாதையும் உள்ள ஒரு நபர் என்று கூறியுள்ளார் கலா மாஸ்டர்.

Advertisement