சினிமா வாய்ப்பு இல்லாததால் இப்படி ஒரு வேலை செய்து மனைவி மற்றும் குடும்பத்தை காப்பாற்றி வரும் காதல் பட நடிகர்.

0
435
karataandi
- Advertisement -

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் காதல். இந்த படத்தில் பரத், சந்தியா, சுகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். குறைந்த பட்ஜெட்டில் இந்த படம் எடுத்தாலும் அதிக வசூலைப் பெற்று தந்து இருந்தது. அதோடு இன்றும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. மேலும், இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அருண். இந்த படத்தில் பரத்துடன் மெக்கானிக்கல் செட்டில் கரட்டாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் தான் அருண். இப்போ எல்லோருக்கும் நினைவில் இருக்கும். இவர் மதுரையை சேர்ந்தவர். காதல் படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பரிச்சயமானார்.

-விளம்பரம்-

காதல் படத்தை தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய்யின் சிவகாசி படத்தில் கூட ஐவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் இவர் வளர தொடங்கியதுமே இவருடைய பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்துவிட்டது. மேலும், இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் காதல் திரைப்படம் கொடுத்த அளவிற்கு வேறு எந்த படமும் ரீச் கொடுக்கவில்லை. அதற்குப் பின்னர் இவர் என்ன ஆனார்? என்று தெரியாமல் இருந்தது.

- Advertisement -

அருணின் தற்போதைய நிலை:

பிறகு சில காலம் கழித்து இவர் இரண்டு வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்திருந்தார் என்றும், இரு வீட்டார் சம்மதத்துடன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இவரின் திருமணத்திற்கு இவர் கூட நடித்த பல நடிகர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். தற்போது இவர் பர்னிச்சர், கட்டில், பீரோ போன்ற மர வேலைகள் செய்யும் தொழில் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அருண் குமார் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரை பயணத்தை குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அருண் அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருப்பது, நான் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவன். நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தான் எனக்கு காதல் பட வாய்ப்பு வந்தது. அதற்கு முன் நான் சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடிப்பேன். அதனால் என்னை பற்றி யாரோ படக்குழுவினருக்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் என் பள்ளியில் வந்து விசாரித்திருக்கிறார்கள். அதற்கு பிறகுதான் காதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் மூலம் எனக்கு மக்கள் மத்தியிலும் நல்ல ரீச் கிடைத்தது.

-விளம்பரம்-

சினிமா வாய்ப்பு குறைய காரணம்:

அதனை தொடர்ந்து நான் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறேன். பின் இடையில் ஏற்பட்ட சூழ்நிலையின் காரணமாக நிறைய இயக்குனர்களின் காண்டக்ட் எல்லாம் தொலைந்து விட்டது. அதனால் என்னால் தொடர்புகொண்டு வாய்ப்புகளை தேட முடியவில்லை. அப்படியே எனக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அது மட்டுமில்லாமல் வீட்டின் சூழ்நிலையும், பிரச்சனையும் அதிகமானதால் வாய்ப்புத் தேட முடியாமல் வேலையை பார்க்கலாம் என்று வந்துவிட்டேன்.

மீண்டும் சினிமா வாய்ப்பு கேட்ட அருண்:

ஆரம்பத்தில் நான் மரம் கட்டில் வேலை செய்யும் இடத்தில் பொருள்களை எடுத்துக் கொடுப்பது, ஆணி அடிப்பது என சின்னச் சின்ன வேலைகளை செய்துகொண்டிருந்தேன். தினக்கூலி தான் வாங்கி இருந்தேன். அதற்கு பிறகு தான் ஒரு வருடத்திற்குள் வேலையை கற்றுக்கொண்டு நானே ஆர்டர் எடுத்து வேலைகளை செய்து வருகிறேன். அது மட்டுமில்லாமல் பழைய பொருள்களை மாற்றி விடும் வேலையையும் செய்து கொண்டிருக்கின்றேன். எனக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதுவரை நான் பேட்டி எதுவும் கொடுக்கவில்லை. இந்தப் பேட்டியின் மூலம் எனக்கு வாய்ப்புகள் வரும் என நம்புகிறேன் என்று கூறி இருந்தார்.

Advertisement