‘காளி’ திரைவிமர்சனம்..!

0
2186
- Advertisement -

தமிழில், “வணக்கம் சென்னை” படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருதிகா உதயநிதி இயக்கியுள்ள இரண்டாவது படம் “காளி “. இந்த படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆன்டனி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், சுனைனா, அம்ரிதா ஐயர், அஞ்சலி மற்றும் ஷில்பா மஞ்சுநாத் என்று 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் அண்டனியே இசையமைத்துள்ளார், வழக்கம் போல அவரது மனைவி பாத்திமா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

-விளம்பரம்-

vijay antony

- Advertisement -

இந்த படத்தில் விஜய் ஆன்டனி அமெரிக்காவில் தனது தந்தை நடத்தும் ஒரு பெரிய மருத்துவமனையில் ஒரு சிறந்த அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்து வருகிறார். ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனியின் அம்மாவிற்கு இரு சிறுநீரகமும் பழுதாகிவிடுகிறது, இதனால் தனது தந்தையிடம் அம்மாவிற்கு நான் ஒரு சிறு நீரகத்தை கொடுக்கிறேன் என்று தெரிவிக்கிறார் விஜய் ஆன்டனி.

அப்போது உனது சிறுநீரகம் உன் அம்மாவிற்கு பொருந்தாது, ஏனென்றால் நீ எங்களது மகன் கிடையாது என்று ஒரு ட்விஸ்ட் அடிக்கிறார் விஜய் ஆண்டனியின் தந்தை . இந்த காட்சிக்கு முன்னால் விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரு கெட்ட கனவு வருவது போல காண்பித்திருப்பார்கள், அந்த கனவில் இருப்பது தான் தனது தாயாக இருக்குமோ என்று இந்தியாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு செல்கிறார் விஜய் ஆன்டனி. அதற்கு பிறகு அவர் தனது பெற்றோர் யாரென்று கண்டுபிடிக்கிறாரா , அவர் சென்ற ஊரில் இவருக்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை.

-விளம்பரம்-

kaali movie review

இந்த படத்தில் எப்போதும் போல தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் விஜய் ஆன்டனி . இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் தனது காமெராவை அழகாக பயன்படுத்தியுள்ளார். ஆனால் இந்த படத்தில் வரும் பாடல்கள் மனதில் பதியும் அளவிற்கு இல்லை .

ஏற்கனவே பிச்சைக்காரன் படத்தில் அம்மா சென்டிமென்டில் நடித்த விஜய் ஆன்டனி இந்த படத்திலும் அதே கருவை எடுத்துள்ளது சற்று சலிப்பை தருகிறது. இருப்பினும் இந்த படத்தில் அவரின் சண்டை காட்சிகளும் சரி, நடனமும் சரி இவர் நடித்த முந்தய படங்களை விட சற்று மெருகேறியுள்ளது என்றே கூறலாம்.

kaali movie

இந்த படம் அம்மா சென்டிமென்ட்டை விரும்பும் ரசிகர்களை வேண்டுமானால் ஓரளவிற்கு கவரலாம். ஆனால் மற்ற தரப்பு ரசிகர்ககளை இந்த படம் ஈர்க்குமா என்பது சந்தேகம் தான். மொத்தத்தில் இந்த படத்தை உங்கள் குடும்பத்துடன் சென்று தைரியமாக ஒரு முறை பார்க்கலாம். இந்த படத்திற்கு எங்களது ஸ்டார் 2.2 / 5.

Advertisement