சின்ன வயசுலேயே ஒரு விபத்துல என் அம்மா,அப்பா இறந்துட்டாங்க – காற்றுக்கென்ன வெளி ரூபாவின் உருக்கமான பேட்டி.

0
468
Dayana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலுக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அண்ணன் – தம்பி, கணவன் – மனைவி, காதல் ஜோடி, புதுமண  என பலவிதமான கான்செப்ட்களில் விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் இளைஞர்களை மிகவும் கவர்ந்த தொடராக உள்ளது.இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. தற்போது இந்த தொடர் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர் ஆக மாறி இருக்கிறது.

-விளம்பரம்-

காற்றுக்கென்ன வேலி டயானா :

இப்படியொரு நிலையில் “காற்றுக்கென்ன சீரியல்” மூலம் பிரபலமான நட்சத்திரங்களில் ரூபா என்ற கதாபாத்திரத்தில் நடித்த டயானாவும் ஒருவர். ஆனால் இவர் தற்போது இந்த சீரியலில் நடிக்கவில்லை. இது தொடர்பாக பிரபல ஊடகம் ஓன்று டயானாவை பேட்டி எடுத்திருந்தது. அந்த பேட்டியில் டயானா பேசுகையில் “என்னுடைய சொந்தா ஊர் கோவை. என்னுடைய வழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது மீடியா தான்.

- Advertisement -

ஒரு விபத்தில் என்னுடைய அப்பா, அம்மா இருவருமே இருந்து விட்டனர். சிறிய வயதில் இருந்தே தாழ்வு மனப்பான்மையுடன் குண்டாக இருக்கிறோம் என்று இருந்தேன். பருமனாக இருக்கும் பெண்கள் சந்திக்கும் அனைத்தையும் நானும் சந்தித்தேன். பலர் என்னிடம் உன்னை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கிண்டலாக பேசுவார்கள். ஆனால் என்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது நடிப்பு தான்.

சினிமாவில் தான் என்னுடைய வழ்க்கை ஆரம்பித்து. அதற்கு பிறகு “பிளாக் பசங்க” என்ற யூடியூப் சேனலில் நடித்து கொண்டு இருக்கும் பொது அதன் மூலமாகத்தான் “காற்றுக்கென வேலி” சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சீரியலில் நடிக்க தொடங்கிய பிறகு இரண்டு வருடங்கள் நன்றாக சென்றது. ஆனால் இப்போது என்னை அந்த தொடரில் இருந்து நீக்கிவிட்டனர். அதற்கு காரணம் 2021ஆம் ஆண்டு ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. ஆனால் எனக்கு சீரியல் மூலம் தான் பிரபலம் கிடைத்து என்றதனால் நான் முடிந்த அளவிற்கு சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன்.

-விளம்பரம்-

ஆனால் தேதி பிரச்சனையாக இருந்தது. அவர்கள் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கலாம், எனக்கும் வழ்க்கை இருக்கிறது. எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொண்டேன். ஆனால் எதோ சிறிய போட்டி இருந்திருந்திருக்கிறது அதனால் தான் என்னை சீரியல் இருந்து நீக்கி விட்டனர். சீரியலில் நடிக்கும் சிறிய கதாபாத்திரங்கள் 2முதல் 3நாட்கள் மட்டும் தான் நடிப்பார்கள் அதற்காக பெரிய சம்பளம் கிடைக்காது. எங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ரைட்டர் கையில் தான் இருக்கிறது. என்னதான் இருந்தாலும் இதுவும் ஒரு தனியார் நிறுவனம் தானே.

என்னை “காற்றுக்கென்ன சீரியலில்” இருந்து நீக்கிய பிறகு எனக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பல இடங்களில் வேலை தேடி அலைந்தேன், பின்னர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வேலை செய்து கொண்டிருக்கும் போதே எனக்கு மீண்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வேலைக்கு போனால் நல்ல வருமானம் அதே நடிக்க போனால் குறைவான வருமானம் தான். இருந்தாலும் பரவாயில்லை என்று நடிக்க வந்துவிட்டேன் என்று கூறினார் காற்றுக்கென்ன சீரியல் டயானா.

Advertisement