நிறைவடைந்த ராஜா ராணி 2 – கடைசி நாள் ஷூட்டிங்கில் இருந்து வெளியான புகைப்படம் இதோ.

0
601
rajarani
- Advertisement -

ராஜா ராணி 2 சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது ராஜா ராணி சீரியல் தான். இந்த சீரியல் ஏற்கனவே முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தொடர்ந்து விறுவிறுப்பாக செல்வதினால் டிஆர்பியிலும் முன்னிலை வகித்து வருகிறது.

-விளம்பரம்-

ராஜா ராணி 2 சிரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இருக்கும் பெண் ஒருவர் இனிப்பு கடை நடத்தி வரும் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். இப்படி இருக்கையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய மனைவி ஐபிஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசையை கதாநாயகன் தெரிந்து கொள்கிறார். ஆனால், இந்த ஆசைக்கு எதிராக கதாநாயகனின் அம்மா இருந்து வருகிறார்.

- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல்:

இறுதியில் எல்லா தடைகளையும் மீறி தன்னுடைய கனவை கதாநாயகி நிறைவேற்றினாரா? என்பது தான் மீதி கதையாக இருக்கிறது. சுவாரசியமாக சென்று கொண்டிருந்த ராஜா ராணி சீரியலில் தொடக்கத்தில் சந்தியாவாக நடிகை ஆலியா மானசா நடித்து வந்தார். ஆனால், ஆலியா மானசா கர்ப்பமாக இருத்தினால் சீரியலில் இருந்து விலகி விட்டார். பின் நடிகை ரியா புதிய சந்தியாவாக நடித்து வந்தார். இவர் சீக்கிரமாகவே ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

சீரியலில் நடிகர்கள் மாற்றம்:

பின் ரியா சீரியலில் இருந்த எந்த காரணமும் சொல்லாமல் விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரைத் தொடர்ந்து வேறொரு நடிகை சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் மட்டும் இல்லாமல் சில நடிகர்களும் சீரியலில் மாற்றம் செய்தார்கள். அதோடு சீரியலின் இயக்குனரே மாற்றம் செய்திருந்தார்கள். இப்படி சீரியலில் பல மாற்றங்கள் செய்து கொண்டிருந்தாலும் சீரியல் நன்றாக தான் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

சீரியலின் கதை:

தற்போது சீரியலில் சரவணன் தான் செய்யாத கொலைக்கு குற்றவாளியாக இருக்கிறார். சந்தியா உண்மையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். இன்னொரு பக்கம் உண்மையை சொல்லிவிட பார்வதி, சிவகாமியும் துடிக்கிறார்கள். இறுதியில் சரவணனுக்கு தண்டனை கிடைக்குமா? சந்தியா உண்மையை கண்டுபிடிப்பாரா? என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சீரியஸ் குறித்த ஒரு முக்கிய அப்டேட் வைரலாகி வருகிறது. அதாவது, சில நாட்களாகவே ராஜா ராணி 2 சீரியல் முடியப்போகிறது என்ற தகவல் இணையத்தில் வைரலாகி இருந்தது.

கடைசி நாள் படப்பிடிப்பு புகைப்படம்:

தற்போது இதை உறுதி செய்யும் வகையில் ராஜா ராணி 2 சீரியலின் கடைசி நாள் போட்டோ வெளியாக இருக்கிறது. அதில், ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் நடிகர்கள் குடும்பமாக நின்று போட்டோ எடுத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் அதில் சந்தியாக கர்ப்பமாக இருப்பது போல் காண்பித்து இருக்கிறார்கள். இதன் மூலம் ராஜா ராணி 2 சீரியல் முடிவடைந்தது உறுதியாகிவிட்டது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் ஏன் சீக்கிரம் முடித்து விட்டீர்கள்? என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement