சமீபத்தில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடித்த “கடைக்குட்டி சிங்கம்” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. குடும்ப சென்டிமென்டோடு, விவசாயத்தின் முக்கியத்துவத்தை பற்றியும் இந்த படத்தில் இயக்குனர் பாண்டிராஜ் வலியுறுத்தியிருந்தார்.
விவசாயம் என்ற சொல்லை வெறும் வாய் வழியாக மட்டும் கூறாமல் ‘கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்குபெறும் காட்சியில் இளைஞர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் காட்சிகளும், விவசாயிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பல காட்சிகளும் இந்த இடம்பெற்று இருந்தது.
அதிலும் இந்த படம் வெளியிவருவதற்கு முன்பாகவே இந்த படத்தில் இருந்து ஒரு காட்சி வெளியாகி இருந்தது. அதில் வயதான பாட்டி ஒருவர் அறுவடை செய்யப்பட்ட கத்திரிக்காயை சந்தைக்கு எடுத்து செல்ல பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருப்பார். ஆனால், பேருந்தில் இருக்கும் நடத்துனர் கத்திரிக்காய் முட்டைகளை ஏற்றும் இடத்தில் பயணிகளை ஏற்றலாம் என்பதால் பேருந்தை நிறுத்தாமல் சென்று விடுவார்.பின்னர் அந்த பேருந்தை துரத்தி பிடித்து நடிகர் கார்த்திக் ‘விவசாயிகள் மூட்டைகளை ஏற்றி செல்ல அணைத்து பேருந்துகளிலும் இடம் இருக்க வேண்டும் என்று கூறி பேருந்தின் கடைசி இருக்கைகளை அகற்றி விடுவார். இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் தற்போதுள்ள விவசாய நலனை கருதி நம் திரையரங்கில் இளநீர் இனி விற்கப்படும் !!
விவசாயம் பற்றி பேசும் ' கடைக்குட்டி சிங்கம் ' திரையிடும் சமயத்தில் இந்நிகழ்வை நடத்தியதில் மகிழ்ச்சி ?@Karthi_Offl @Suriya_offl @pandiraj_dir @2D_ENTPVTLTD pic.twitter.com/IubVKGdsQY— Ram Muthuram Cinemas (@RamCinemas) July 22, 2018
இந்நிலையில் இந்த காட்சியில் வலியுறுத்திய விடயத்திற்கு தமிழக அரசு செவி சாய்த்து தற்போது அனைத்து பேருந்துகளிலும் விவசாய பொருட்களை இலவசமாக ஏற்றலாம் என்று புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியாக திருநெல்வேலியில் உள்ள ராம் மதுரம் திரையரங்கத்தில் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக இளநீர் விற்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அந்த திரையரங்கின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.