சித்தி 2 தொடருக்காக திருமணம் சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம். யார் தெரியுமா ?

0
24641
Chithi
- Advertisement -

சமீப காலமாகவே தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 2018 ஆம் ஆண்டு “திருமணம்” என்ற சீரியல் ஒளிபரப்பானது. இந்த சீரியல் முழுக்க முழுக்க உணர்ச்சிகரமான காதல் தொடர் ஆகும். இந்த தொடர் கன்னட மொழியில் புகழ் பெற்ற அக்னிசாட்சி என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த திருமணம் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதோடு கலர்ஸ் தமிழிலேயே இந்த சீரியல் தான் சூப்பர் ஹிட் என்று சொல்லலாம். இந்த சீரியலில் ஹீரோவாக டப்ஸ்மாஷ் சித்து நடிக்கிறார். கதாநாயகியாக நந்தினி புகழ் ஸ்ரேயா நடித்து வருகின்றார். இவர்களுடைய ஜோடிப் பொருத்தத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் இவர்கள் நிஜத்திலும் ஜோடியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

-விளம்பரம்-
Related image

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் இந்த தொடரில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது. அந்த வகையில் டிக் டாக் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா. திருமணம் சீரியலில் அனிதா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ப்ரீத்தி ஷர்மா. திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் உள்ளார்கள். திருமண சீரியலின் கதைப்படி இவர் கதாநாயகனின் தங்கையாக நடிக்கிறார். தங்கை அனிதாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அந்த திருமணத்தில் ஆயிரம் பிரச்சனைகளும், சிக்கல்களும் வருகிறது. இப்படி கதை விறுவிறுப்பாக போய் கொண்டு உள்ள சமயத்தில் ரசிகர்களை கவர்ந்த அனிதா(ப்ரீத்தி ஷர்மா) சீரியலில் இருந்து விலகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பாருங்க : லிப் லாக் காட்சியில் நடிக்க கார்த்திக்கு ஜோதிகா கொடுத்த அட்வைஸ். நடிகை சொன்ன சீக்ரெட்.

இதனால் ரசிகர்கள் எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாசமழை பொழிந்து தள்ளி வருகின்றனர். ‘ஐ அம் பீலிங் டவுன், என்னை மன்னித்து விடுங்கள் ப்ளீஸ் என்றும் மன்னிப்பு கடிதம் ஒன்றை ப்ரீத்தி ஷர்மா பதிவிட்டு உள்ளார். தற்போது அனிதா கதாபாத்திரத்தில் ப்ரீத்திக்கு பதிலாக நடிகை வித்யா சந்திரன் ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. ஏன் நீங்கள் சீரியல் விட்டு விலகி விட்டீர்கள்? என்ன பிரச்சனை? என்று பிரித்தி இடம் கேட்டதற்கு அவர் கூறியது, எனக்கு சிரியலில் இருந்து விலகுவது ரொம்ப கஷ்டமாக இருக்கு. ஏன்னா, இந்த திருமணம் சீரியல் மூலம் தான் எனக்கு இவ்வளவு ரசிகர்களின் பாசம், அன்பு கிடைத்தது. சீரியலில் என்னுடைய கதாபாத்திரம் ஆரம்பத்தில் எப்போதாவது தான் வரும். ஆனால், சில வாரங்களாகவே என்னுடைய கதாபாத்திரம் விருவிருப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-
Image result for chithi 2

அதுமட்டுமில்லாமல் என் கதாபாத்திரத்தை வைத்து தான் கதை நகருகிறது என்று சொல்லலாம். இந்த சமயத்தில் தான் எனக்கு ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. நான் இதை நினைத்து கூட பார்க்கவில்லை. எனக்கு சன் டிவியில் “சித்தி 2” சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனால் தான் கடந்த சில மாதங்களாகவே திருமணம் சீரியலுக்கு தேதி கொடுப்பது பிரச்சினையாக வந்தது. மேலும், திருமணம் சீரியலுக்கு என்னால் அதிக தேதிகளும் ஒதுக்க முடியவில்லை. அது மட்டுமில்லாமல் என் கதாபாத்திரத்திற்கு இப்ப தான் அதிகமாக முக்கியத்துவம் இருக்கிறது. அதனால் நீங்கள் அதிக தேதிகள் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்கள்.

ஆனால், தொடர்ந்து எனக்கு இரண்டு சீரியலில் நடிக்க பிரச்சனைகள் வந்திருப்பதால் ஒரு கட்டத்தில் அவர்கள் எனக்கு பதிலாக வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்திருந்தார்கள். எனக்கும் அது சரி என்று தோணுச்சு. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் என்னால பிரச்சனை ஏற்பட கூடாது என்று நானும் சீரியலை விட்டு விலகி விட்டேன். எனக்கு ரொம்ப மனசு வலிக்குது. ரசிகர்கள் எல்லாரும் ரொம்ப பீல் பண்ணி இணையங்களில் பதிவிட்டு இருக்காங்க. மேலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும். உங்களுடைய அன்புக்கும் பாசத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்று கூறியுள்ளார்.

Advertisement