எல்லாரும் என் உடலை தான் பார்க்கிறாங்க – காதல் பட நடிகை வருத்தம். இவர் யார் தெரியுமா?

0
481
- Advertisement -

தமிழில் கடந்த 2004ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்த நடிகை தான் சரண்யா நாக். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 1998ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் ஒரு சில படங்களில் நடித்த இருந்தார். இருந்தாலும், சரண்யா காதல் படத்தின் மூலம் தான் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

காதல் திரைப்படத்திற்கு பின்னர் இவர் துள்ளுற வயசு என்ற படத்தில் நடித்திருந்தார். பின் இவர் ஒரு வார்த்தை பேசு என்ற படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருந்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின்னர் தெலுங்கில் இவர் 10th கிளாஸ் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படமும் சொல்லிக் கொள்ளும்படி வெற்றிபெறவில்லை. அதன் பின்னர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார் சரண்யா.

- Advertisement -

சரண்யா நாக் திரைப்பயணம்:

அந்த வகையில் 2009ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக சரண்யா நடித்திருந்தார். அதன்பின்னரும் இவருக்கு கதாநாயகி வாய்ப்பு சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இறுதியாக இவர் 2015 ஆம் ஆண்டு ஈர வெயில் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. இடையில் ஒரு சில குறும் படங்களில் கூட சரண்யா நடித்திருந்தார்.

சினிமாவில் விலகிய சரண்யா:

அதற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய சரண்யா நாக் மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் லாபம் படத்தில் பணியாற்றியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சரண்யா, 2016 ஆம் ஆண்டில் இருந்தே நான் எந்த படமும் பண்ணவில்லை. என்னுடைய ஹார்மோன் பிரச்சனை காரணமாக எதுவுமே பண்ணாமல் இருந்தேன். ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தால் நடிகைகள் என்றால் உடல் எடை கரெக்ட்டாக இருக்கும். கொஞ்சம் அதிகம் என்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என தெரியவில்லை.

-விளம்பரம்-

சரண்யா பேட்டி:

மேலும், தைராய்டு பிரச்சனை இருந்ததால் எடை அதிகரித்தது. இதனால் எனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமானது. வெளியில் எதுவும் சொல்லிடுவாங்களோ, தப்பு தப்பா பேசிடுவார்களோ என்று எதுவும் பண்ணவில்லை. இதுவே ஒரு கட்டத்தில் என்னுடைய மனதுக்குள் அதிகமாக இருந்தது. இதனாலே கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நான் எதுவுமே பண்ணவில்லை. என்னிடமிருந்த சேமிப்புகளை வைத்து என்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்தேன். என் வேலையை பார்க்கலாம் எவ்வளவு தான் லோன் எடுக்க முடியும் என்று சொல்லி தான் வெளியில் வந்தேன்.

உடல் எடை குறித்து சொன்னது:

அதேசமயம் வெளியில் எங்கு போனாலும் என்னை யாருமே கண்டுபிடிக்கவில்லை. சிலர் கண்டுபிடித்து வெயிட் போட்டது பற்றி பேசினார்கள். அதற்குப் பிறகு ஜனநாதன் சார் தான் லாபம் படத்துக்காக என்னை மீண்டும் கூப்பிட்டு இருந்தார். என்னுடைய தாழ்வு மனப்பான்மையை போக்க வேண்டும் என்று சொல்லி போஸ்ட் ப்ரடக்ஷன் பணியில் பணியாற்ற சொன்னார். அப்போது பிரபல பத்திரிகை ஒன்று நான் தூய்மை பணியாளர்களுக்கு செய்த உதவி பற்றி கட்டுரை வெளியிட்டதால் தான் நான் மீண்டும் வெளியில் தெரிய ஆரம்பித்தேன். இந்த இடைவெளிக்கு காரணம் என்னுடைய மனப்பான்மை தான். நம்மைச் சார்ந்த ஊடகம், சினிமா, கூட இருப்பவர்கள் யாருமே சப்போர்ட் கிடையாது. 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நெகட்டிவ் இப்போது இல்லை. அப்போது என்னுடைய உடலை குறித்து எல்லோரும் பேசாமல் இப்போது , நீங்க என்ன பண்ணப் போறீங்க போன்ற கேள்விகளை தான் கேட்கிறார்கள் என்று வருத்தத்துடன் பேசி இருந்தார்.

Advertisement