‘பிரண்ட்ஸ்லாம் ஆகாதீங்க,சண்ட போடுங்க’ – நாரதர் வேலை பார்த்த ரவீனாவை டோஸ் விட்ட அர்ச்சனா.

0
514
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 8வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, பிராவோ, அக்ஷயா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் வரை பிக் பாஸ் வீட்டில் 14 பேர் இருக்க பாஸ் வீட்டில் மேலும் 3 wild card போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்படும், அதில் வென்றால் பிக் பாஸ் வீட்டில் தொடரலாம், தோற்றால் wild card போட்டியாளருக்கு வழிவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தார் பிக் பாஸ்.

- Advertisement -

கடந்த வாரம் நடைபெற்ற மூன்று பூகம்ப டாஸ்கில் இரண்டு டாஸ்கில் போட்டியாளர்கள் தோற்றதால் இரண்டு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உறுதியானது. அந்த வகையில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விஜய் வர்மா மற்றும் அனன்யா wild Card போட்டியாளர்களாக உள்ளே நுழைந்து இருக்கின்றனர். இவர்கள் இருவரின் வருகையில் டபுள் ஏவிக்ஷன் ஏற்பட்டது. இதில் பிராவோ மற்றும் அக்ஷ்யா வெளியேறினார்கள்.

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன்சி டாஸ்கில் விஷ்ணு, நிக்சன்,ஜோவிகா ஆகியோர் பங்கேற்று இருந்தனர். இதில் நிக்ஸன் வெற்றி பெற்று இந்த வார தலைவரானார். தலைவரானதால் இந்த வாரம் நடைபெறும் நாமினேஷனில் இருந்து தப்பித்துவிட்டோம் என்று மகிழ்ச்சியில் இருந்தார் நிக்சன். இப்படி ஒரு நிலையில்நேற்றய நிகழ்ச்சியில் நிக்சன் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்தார் பிக் பாஸ்.

-விளம்பரம்-

அதாவது நிக்சனின் கேப்டன்சியில் யாருக்காவது அநீதி நிகழ்ந்து இருக்கும் பட்சத்தில் வீட்டில் வைத்து இருக்கும் மணியை அடிக்கலாம். ஒருவேளை பெரும்பாலனோர் மணி அடிக்கும் பட்சத்தில் நிக்சனின் கேப்டன் பதிவு பறிக்கப்படுவதுடன் அவர் நேரடியாக இந்த வார நாமினேஷனில் இடம்பெறுவார் என்றும் அறிவித்து இருந்தார் பிக் பாஸ். இதனால் கேப்டன் டாஸ்க்கை வென்றும் இந்த வாரம் ஆபத்தில் சிக்கி இருக்கிறார் நிக்சன்.

நேற்றய நிகழ்ச்சியில் விஷ்ணு மற்றும் அர்ச்சனா இருவருக்கும் மிகப்பெரிய சண்டையே வெடித்தது. இதில் ஒருவரை ஒருவர் மாறி மாறி கடும் வார்த்தைகளை விட்டனர். இப்படி இருக்க தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஷ்ணு – அர்ச்சனா இருவரையும் ஒரே கயிற்றில் கட்டிப்போட்டு இருகின்றனர். அப்போது ரவீனா, விஷ்ணுவிடம் ‘பிரண்ட்ஸ்லாம் ஆகாதீங்க சண்ட போடுங்க’ என்று சொன்னதும் கடுப்பாகி அர்ச்சனா, ரவீனாவிற்கு டோஸ் விட்டுள்ளார்.

Advertisement