‘தொலைகாட்சியில் நான் ரெடி தான் பாடலை போட்டால்’ – லியோ படத்தை பார்த்த பின் ராஜேஸ்வரி போட்ட பதிவு.

0
347
Rajeswari
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபீசிலும் இடம் பெறும். அந்த வகையில் இறுதியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களில் பெரும் தோல்வியை தழுவியது. இருப்பினும் வசூல் ரீதியாக படம் வெற்றி கண்டது. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.

-விளம்பரம்-

சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த செய்திகள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும், விஜய்யின் லியோ படம் உலக அளவில் முதல் நாள் 130 கோடி வசூல் செய்து இருக்கிறது. தமிழகத்தில் முதல் நாள் 73 கோடி வசூல் செய்திருக்கிறது. இத்தனைக்கும் ஸ்பெஷல் சோ எதுவும் இல்லாமலே லியோ படம் வசூல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பார்த்த பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் லியோ படம் குறித்து ராஜேஸ்வரி பிரியா பதிவிட்டு இருக்கிறார். அதில் ‘நேற்று கோயம்புத்தூர் அர்ச்சனா திரை அரங்கில் லியோ திரைப்படம் பார்த்தோம். திரைப்படம் குறித்த விமர்சனம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஆனால் இளைஞர்களை சீரழிக்கும் வகையிலான நான் குறிப்பிட்ட பாடல் வரிகள் திரையரங்கில் நீக்கம் செய்யபட்டதனை கண்டதும் மகிழ்ச்சியே.

தொலைகாட்சிகளிலும் இதே போன்றே “நான் ரெடியா”பாடல் ஒலிபரப்பபடும் என்று நம்புகிறேன். இருந்தாலும் திரைப்படம் முழுவதும் புகையே என்பது வேதனைதான். சமூக நலன் சார்ந்து குறிப்பாக குழந்தைகள் நலன் மீது அக்கறை கொண்டு நான் எடுத்த முயற்சிக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. நடிகர் விஜய் அவர்கள் வருங்காலத்திலாவது புகை மற்றும் மது காட்சியில் நடிக்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்

-விளம்பரம்-

பொதுவாக விஜய் படங்கள் என்றாலே சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றி தான். அந்த வகையில் இந்த பட ட்ரைலரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை தான் பெரும் சர்ச்சையை தற்போது ஏற்படுத்திஇருந்தது. அந்த வகையில் ராஜேஸ்வரி பிரியா தொடர்ந்து லியோ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். லியோ படம் ட்ரைலர் வெளியான போது கூட ராஜேஸ்வரி பெரிய பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘ ‘லியோ ட்ரைய்லர் பார்த்தேன்.

விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? விஜய் கெட்ட வார்த்தை பயன்படுத்தியுள்ளது(1.46 நிமிடத்தில்)அவரது தரத்தை மிகவும் குறைத்துள்ளது. பெண்களை இழிவு செய்யும் வார்த்தை விஜய்க்கு வசனமா?திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்? விஜய். ரசிகர்களை தவறாக வழிநடத்தும் விஜய்க்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து கொள்கிறேன். லோகேஷ் கனகராஜ் தகுதி இல்லாத இயக்குனர். திரைப்படத் துறை முன்வந்து இதனை எதிர்க்க வேண்டும் என்று செவன் ஸ்க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தையும் tag செய்து இருந்தார்.

Advertisement