உயரத்தை காரணம் காட்டி போலீஸ் ரோலுக்கு நிராகரித்த இயக்குனர் – அதே போலீஸ் ரோல்களில் நடித்து வென்று காட்டிய ஜார்ஜ் மரியன்.

0
460
- Advertisement -

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நெப்போலியன் என்ற கதாபாத்திரத்தில் அசத்தியவர் ஜார்ஜ் மரிய. ன்சொந்த ஊரு விளாத்திக்குளம். அப்பா அம்மா கலப்புத்திருமணம் பண்ணிக்கிட்டவங்க. ஜார்க்கு மனைவி, ஒரு பையன், ஒரு பொண்ணுனு சின்னதா ஒரு குடும்பம்.1985-ல பிளஸ் டூ முடிச்சதும், லயோலா காலேஜ்ல பாதிரியார் அகஸ்டின் நடத்துன வீதிநாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். அப்போ கூத்துப்பட்டறை நடத்தின முத்துச்சாமி மாஸ்டர் கேரளாவுல நாடகம் போடுறதுக்கு ஆள் கேட்டிருக்கார். அப்போதான் ஜார்ஜ் மரியான் கூத்துப்பட்டறைக்குள்ள போனார்.

-விளம்பரம்-

1989ல இருந்து 2002 வரைக்கும் கூத்துப்பட்டறையில் 120 நாடகங்கள் வரைக்கும் பண்ணினார். அதுக்குப் பின்னால 2001 ஆம் ஆண்டு நாசர் நடிப்பில் வெளியான`மாயன்’ என்ற ஒரு படம் மூலமா சின்ன ரோல்ல நடிச்சார், ஜார்ஜ். அந்தப் படத்துலதான் பசுபதி உள்ளிட்ட பல கூத்துப்பட்டறை கலைஞர்கள் நடிச்சிருப்பாங்க. காஞ்சீவரம் படத்தில் பிரியதர்ஷன் கிட்ட அஸிஸ்டெண்டா ஏ எல் விஜய் வேலை பார்த்தார். அவர் தான் ஜார்ஜை அந்தக் கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்திருக்கார்.

- Advertisement -

அப்போது முதலே ஏ.எல்.விஜய்க்கு ஜர்ஜின் நடிப்பு பிடித்துப் போயிருக்கிறது. அப்புறமா அவர் இயக்கின பொய் சொல்லப் போறோம் படம் மூலமா ஜார்ஜை நடிக்க வச்சவர், அதைத்தொடர்ந்து மதராசப்பட்டினம், சைவம், தெய்வத்திருமகள்னு இவர் கொடுத்தது எல்லாமே நல்ல ரோல்கள்தான். முதல்முதலா ஜார்ஜ் மரியன் சரத்குமார் நடிச்ச கம்பீரம் படத்துல நடிக்குறதுக்கு கமிட் ஆனார். வரைப் பார்க்காமலேயே டைரக்டர் இவரைப் பத்தி கேள்விப்பட்டு கமிட் பண்ணிட்டார்.

ஷூட்டிங்குக்கு முன்னாடி நாள் ஆள் ஷார்ட்டா இருக்குறதை நேர்ல பார்த்துட்டு, போலீஸ் ரோல்ல சரத்குமார் பக்கத்துல இவர் சரியா இருக்க மாட்டார்னு ரிஜக்ட் பண்ணிட்டார் இயக்குநர். ஆனா விதி வலியது… அதே ஜார்ஜ் மரியான் சினிமா வாழ்க்கையில போலீஸ் ரோல்லதான் அதிகமா நடிச்சிருக்கார். அதே போலீஸ் ரோல்ல கைதியில கொண்டாடப்பட்டதெல்லாம் பூமராங்கின் உச்சம்.

-விளம்பரம்-

மதராசப்பட்டினத்தில் வாத்தியார் கேரெக்டர் ரொம்பவே இவரைக் கவனிக்க வச்சது. அதுவும் ஆர்யா குரூப்கிட்ட மாட்டிக்கிட்டு, எ..ஏ..பி..பீனு சொல்லிக் கொடுக்குற இடத்துல பயந்த சுபாவமா பார்வை பார்த்து அதை தன்னோட மாடுலேஷன்ல சொல்லியிருப்பார். இன்னொரு காட்சியில நைட்ல ஆர்யா குரூப் வந்து இங்கிலீஷ்ல நன்றி சொல்லணும்னு கேட்குற சீன்லயும் மனுஷன் அசால்ட்டா செய்திருப்பார். சைவம்ல இங்கிலீஷ் தெரியாம மாட்டிட்டு முழிக்கிறது, குடும்பமே சண்டைப்போட்டு பிரிஞ்சு கிடக்கும்போது பொய் சொல்லி கூப்பிடுறது, ஐயாக்கிட்ட சென்டிமென்டா பேசுறதுனு எல்லா எமோஷன்களையும் அவ்வளவு அழகா ஹேண்டில் பண்ணியிருப்பாரு.

அடுத்ததா கலகலப்பு க்ளைமேக்ச்ல காமெடி போலீஸ் கதாபாத்திரத்துல தங்கப்பதக்கம் சிவாஜி முதல் சிங்கம் சூர்யா வரைக்கும் போலீஸ் மாடுலேஷன்களை தெரிக்க விட்டிருப்பாரு மனுஷன். இடுப்புல கைய வச்சுகிட்டு அலக்ஸ் பாண்டியன் ஏன் இன்னும் உங்களுக்கு டிபார்ட்மெண்ட்ல பேண்ட் கொடுக்கலைனு பேசுறதெல்லாம் காமெடியின் உச்சமாவே இருக்கும். இங்கதான் தான் ஒரு பெர்பார்மர்ங்குறதை நிருபிச்சிருப்பார்.

அடுத்ததா பல படங்கள் நடிச்சாலும், ‘கைதி’ ஒரு மைல் கல்னே சொல்லலாம். அதுவரைக்கும் முப்பது படங்களுக்கு மேல நடிச்சிருந்தாலும், ‘கைதி’ அவருக்கு ஒரு துவக்கம்னே சொல்லலாம். நீங்க தான் கமிஷனர் ஆபீசை பாத்துக்கணும்னு சொன்ன உடனே யூனிஃபார்ம் மாட்டிக்கிட்டே ஓடி வர்றதாகட்டும், கதவை இழுத்து மூடுங்கடானு கத்துற இடம், ‘டேய் பசங்களா உங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, இந்த பொண்ணுக்கு எதுவும் ஆகாம பாத்துக்கணும்னு வசனங்கள் பேசுற இடம்னு ஒரு மெயின் ஹீரோவுக்கு கொஞ்சமும் குறையாத கேரெக்டர் ஜார்ஜ் மரியன் உச்சம் மிரட்டியிருப்பார். அதுவும் அவர் வர்ற சீன்ஸ்லாம் செம மாஸா இருக்கும். இன்னும் இதுபோல நிறைய நல்ல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என நாமும் வாழ்த்துவோம்

Advertisement