தளபதி 68 படத்தின் பூஜை இன்று நடைபெற்று இருந்தது. இந்த படத்தில் எத்தனையோ பேர் நடித்தாலும் விஜய் மற்றும் லைலா இருக்கும் புகைப்படம் தான் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதற்க்கு காரணம் இந்த படத்தில் நடிக்க இருக்கும் சினேகா ஏற்கனவே விஜயுடன் ‘வசீகரா’ படத்தில் நடித்துவிட்டார். ஆனால், 90ஸ் ரசிகர்களுக்கு ஜெனிலியாவாக இருந்த லைலா விஜய்யுடன் நடிப்பது இதுவே முதல் முறை என்பதால் தான் ரசிகர்கள் பலரும் லலைலாவை பற்றி பேசி வருகின்றனர்.
இதெற்கெல்லாம் மேலாக இன்று லைலா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது பிறந்தநாளில் மூன்று மகிழ்ச்சியான விஷயம் நடைபெற்று இருப்பதாக லைலா மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் பேசியுள்ள அவர் ‘ லைலா பிதாமகன் வெளியாகி 20 ஆண்டு, சர்தார் வெளியாகி ஓராண்டு, தளபதி 68 படத்தின் அறிவிப்பு – என் பிறந்தநாள் எப்போதும் ஏனலு ஸ்பெஷலான விஷயங்களை கொடுத்து வருகிறது. உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி’ என்று பேசி இருக்கிறார்.
விஜய் லைலா நடிக்க இருந்த :
லைலா முன்னனி நடிகையாக இருந்த போது அந்த சமயத்தில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வந்த பிரசாந்த், அஜித், விக்ரம்,சூர்யா என்று அனைத்து நடிகர்களுடன் நடித்துவிட்டார். ஆனால், விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு அமைந்தும் அது கை நழுவி போனது. தனது ஆரம்ப காலத்தில் விஜய் ஹீரோவாக நடித்த பல படங்கள் தோல்வியில் தான் முடிந்தது. அந்த சமயத்தில் தான் தனது அப்பா மற்றும் இயக்குனர் சந்திரசேகரை விட்டு விக்ரமன் இயக்கத்தில் வந்த ‘பூவே உனக்காக’ படத்தில் நடித்தார் விஜய்.
விலகிய விஜய் :
இந்த படத்தின் மூலம் அவருக்கு ஒரு காதல் ஹீரோ இமேஜே கிடைத்தது . அந்த படம் தான் அவருக்காக ப்ரேக் ஆகும். சரியாக சொல்லபோனால் இயக்குனர் விக்ரமன் சரியான நேரத்தில் வந்து விஜய்க்கு ஒரு நல்ல படத்தைக் கொடுத்தார். அதன் பின் பல காதல் படங்களில் நடித்து மாஸ் காட்டினார் விஜய். மீண்டும் விஜயை வைத்து அதே போன்று ஒரு காதல் படத்தை இயக்க முடிவு செய்து ‘உன்னை நினைத்து’ என்ற ஒரு காதல் ஸ்க்ரிப்டை தயார் செய்தார் விக்ரமன்.
சூர்யாவிற்கு கிடைத்த வெற்றி :
இதில் விஜய் நடிக்கவும் ஒப்புக் கொண்டு போட்டோ சூட் எல்லாம் முடிந்து நடிக்க ஆர்ம்பித்தார். படத்தின் சூட்டிங் ஆரம்பித்து ஒரு நாளில் படத்தில் இருந்து விலகினார் விஜய். அதன் பின்னர் தான் இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடித்தார். நந்தா திரைப்படத்திற்கு பின்னர் சூர்யாவிற்கு ஒரு மாபெரும் வெற்றிப்படமாக இது அமைந்ததோடு சூர்யாவிற்கு குடும்ப ரசிகர்களை பெற்றுத்தந்ததும் இந்த படம் தான்.
லைலா பதிவிட்ட புகைப்படம் :
ஆனால், இந்த படத்தில் விஜய்யுடன் நடிக முடியவில்லை என்றாலும் விஜயுடன் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்த லைலா இந்த புகைப்படத்திற்கு என்னிடம் இருந்து தப்பித்த ஒருவர் என்று தலைப்பை கொடுப்பேன். உங்கள் அனைவருக்கும் தெரியும் இந்த ஒரு ஹீரோ தான் என்னிடம் எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனால், இப்போதும் நாங்கள் இருவரும் ஒன்றாக நடித்ததற்கு ஆதாரமாக புகைப்படங்கள் இருக்கிறது என்று Cuteஆக பதிவிட்டு இருந்தார்.