கழுத்தில் பந்தாவாக இருந்த செயின், பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே சென்று கைது செய்த போலீசார்.

0
380
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் ஒருவர் வனத்துறையினால் கைதாகி இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் ஒளிபரப்பப்படும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் இந்தியில் தான் ஒளிபரப்பி இருந்தார்கள். தற்போது இந்தியில் பல ஆண்டுகாலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியை ஹிந்தியில் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அதனை தொடர்ந்து பிற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை கடந்து இருக்கிறது. மேலும், இந்த எல்லா சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியது.

- Advertisement -

கன்னட பிக் பாஸ்:

மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பிரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சி தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் வெளியாகி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் கன்னடத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதை பிரபல கன்னட நடிகர் மற்றும் இயக்குனர் கிச்சா சுதீப் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

வர்தூர் சந்தோஷ் குறித்த சர்ச்சை:

மேலும் இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் எட்டாம் தேதி முதல் கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் பாக்யஸ்ரீ, எஷானி, கார்த்திக், மைக்கேல், நம்ரதா, நீது, பிரதாப், ரக்‌ஷக், சங்கீதா, சந்தோஷ் குமார், வர்தூர் சந்தோஷ், சரி, சினேஹித், தனிஷா,வினய், கௌரிஷ், ஷ்யாம், சித்ரால், அவினாஷ் ஆகிய 19 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்ட வர்தூர் சந்தோஷ் தற்போது வனத்துறையினால் கைதாகி இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-

வர்தூர் சந்தோஷ் கைது:

காரணம், அவர் புலி நகம் கொண்ட செயின் ஒன்றை அணிந்திருந்தார். இது இந்த நிகழ்ச்சியின் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிய வந்திருக்கிறது. இதனால் வனத்துறை சட்டம் படி புலி நகங்களை வைத்திருப்பது குற்றம். இதனை தொடர்ந்து வர்தூர் சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்து வனத்துறையினர் பிக் பாஸ் வீடு இருக்கும் இடத்திற்கே சென்றிருக்கிறார்கள். அங்கு வர்தூர் சந்தோஷ் செயினில் இருந்த நகங்களை சோதனை செய்திருக்கிறார்கள். பின் இது ஒரிஜினல்தான் என்று தெரியவந்தது. இதை அடுத்து அவருடைய செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

வனத்துறை துணைப் பாதுகாவலர் பேட்டி:

பின் அடுத்த சில மணி நேரங்களுக்கு பிறகு பிக் பாஸ் வீட்டிலிருந்து வர்தூர் சந்தோஷ் வெளியேறி இருக்கிறார். அதன் பின் வனத்துறையினால் வர்தூர் சந்தோஷ் கைதும் செய்தாயிருக்கிறார். இது தொடர்பாக வனத்துறை துணைப் பாதுகாவலர் ரவீந்திர குமார், பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது. அதற்குப் பிறகுதான் நாங்கள் கோமகட்டா அருகே உள்ள பிக் பாஸ் ஸ்டூடியோவுக்கு சென்று ஆய்வு செய்தோம். பின் வர்தூர் சந்தோஷ் இடம் விசாரணை நடத்தினோம். அழிந்து வரும் உயிரினம் பட்டியலில் புலிகள் இருக்கிறது. இதற்கு மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement