கொரோனாவுக்கு காஜல் கொடுத்த நிதி. ஜல்லிக்கட்டு எதிரியான பீட்டாவுக்கு கொடுத்திருக்காங்க.

0
3035
kajal
- Advertisement -

நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13387 ஆகவும், 437 பேர் பலியாகியும் உள்ளார்கள். இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். இதனால் போக்குவரத்துகள், கடைகள், பொது இடங்கள், சினிமா படப்பிடிப்புகள் என அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
I am not a superstar, says Kajal Agarwal

ஊரடங்கு உத்தரவினால் மக்களின் இயல்பு வாழ்கை மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு பிரச்சனை தலை தூக்கி ஆடுகிறது. சினிமா படப்பிடிப்புகள் எல்லாம் ரத்து செய்யப் பட்டிருப்பதால் சினிமா தொழிலாளர்கள் மிகவும் அவதிப்பட்டு உள்ளார்கள். 15 ஆயிரத்திற்கும் அதிகமான சினிமா ஊழியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அல்லல் பட்டு கொண்டு இருக்கின்றார்கள்.

- Advertisement -

இவர்களுக்கு உதவ நடிகர்கள், தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டிருந்தது. அதே போல் மத்திய, மாநில அரசுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதற்காக சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களால் முடிந்த நிதி உதவியை கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை காஜல் அகர்வாலும் தன்னால் முடிந்த நிதி உதவியை கொடுத்துள்ளார். நடிகை காஜல் அகர்வால் சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சமும், பிரதமரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும், மகாராஷ்டிர முதல்வரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும், தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 2 லட்சம் என மொத்தமாக ரூ.6 லட்சம் ரூபாய் நிதியுதவியாக கொடுத்து உள்ளார்.

-விளம்பரம்-

இதை தவிர தன்னிடம் உதவி கோரிய விலங்குகள் நல அமைப்பான பீட்டாவுக்கும் அவர் உதவிக்கரம் நீட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சினிமாவை மட்டும் நம்பி வாழ்ந்து வரும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் வரும் வருமானத்தை நம்பி இருந்த அவர்கள் தற்போது உணவுக்கே அல்லாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக தெலுங்கு சினிமா துறையில் CCC எனப்படும் Corona Crisis Charity என்பதை கொண்டு வந்துள்ளனர். நடிகர் சிரஞ்சீவி மற்றும் பிலிம் சேம்பர் இணைந்து உருவாக்கிய இதன் மூலமாக சினிமா தொழிலாளர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் கோலிவுட் வட்டாரத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடனும் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement