நடிகை காஜல் அகர்வால் தனது பிரசவம் அனுபவத்தை குறித்து பதிவிட்ட போஸ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் இருந்தவர் காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதன் பின் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா சினிமா பக்கம் காஜல் வந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின் இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். கடைசியாக காஜலின் நடிப்பில் வெளிவந்த படம் ஹே சினாமிகா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனிடையே காஜல் அவர்கள் மும்பை தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்தார்.
கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த காஜல் :
பின் 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணம் கொரோனா லாக் டவுனில் நடந்ததால் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. அதோடு திருமணத்திற்கு பின்னும் காஜல் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். பின் 2022 புத்தாண்டை வரவேற்கும் விதமாக காஜல் அகர்வாலின் கணவர் காஜல் கர்ப்பமாக இருக்கும் பதிவை பதிவிட்டுருந்தார். பின் காஜலும் தான் கர்ப்பமாக இருப்பதை சோசியல் மீடியாவில் அறிவித்தார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அதன் பின் அடிக்கடி போட்டோ ஷூட்களை பதிவிட்டு வந்தார் காஜல்.
சமீபத்தில் பிறந்த மகன் :
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதாவது ஏப்ரல் 19 ஆம் தேதி காஜலுக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் காஜலுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. மேலும், குழந்தை பிறந்த நிலையில் காஜல் மற்றும் அவரது கணவர் இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர். பின் காஜல் கணவர் கெளதம் கிச்லு ‘தங்கள் மகன் 19 ஆம் தேதி பிறந்தார் என்றும் அவருக்கு ‘நீல் கிச்சலு’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறி இருந்தார். இந்நிலையில் காஜல் தனது மகனின் வருகையை அறிவித்து தனது பிரசவ அனுபவத்தை குறித்து போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது,
பிரசவ அனுபவத்தை பகிர்ந்த காஜல்:
என் குழந்தை நீலை இந்த உலகத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீல் பிறந்த அந்த சில நொடி என் மார்பில் அவனை பிடித்துக் கொண்டதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு. பயங்கர சந்தோசமாக இருந்தேன். அந்த நேரத்தில் தான் காதல் என்பதை புரிந்து கொண்டேன். அதோடு ரெஸ்பான்சிபிலிட்டியையும் புரிந்து கொண்டேன். குழந்தை பிறப்பு நிச்சயமாக எளிதானது அல்ல. உண்மையில் பிரசவத்திற்குப் பிறகு நான் நிச்சயமாக அழகாக உணர்கிறேன். இந்த பிறப்பு அனுபவம் எங்கேயும் கிடைக்காது. இந்த சந்தோஷம் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. மூன்று நாட்கள் தூங்கவில்லை, ரத்தம் வந்தது, பயங்கர சிரமப்பட்டேன்.
பிரசவத்திற்கு பின் குறித்து காஜல் சொன்னது:
ஆனால், என் மகனை பார்க்கும் போது அந்த கஷ்டம் எல்லாம் போய் விட்டது. குழந்தையை கவனிப்பது, காலையில் நேரத்தில் எழுவது என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டாலும் குழந்தை பிறந்த பிறகு இந்த மாதிரி ப்ராசஸ் நிறைய கற்றுக்கொண்டேன். குழந்தைக்கு பால் கொடுப்பது, என்னுடைய உடல்நிலை, குழந்தையின் ஆரோக்கியம் குறித்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். இதை எல்லாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்ற பயம் இருந்தாலும் எப்படியோ கடந்து போய்க் கொண்டிருக்கிறேன். இந்த மாதிரி நேரங்களில் நான் ரொம்பவே விரும்பி பார்ப்பது குழந்தையின் முகம் தான்.
கவலைகள் மறக்க காரணம்:
நாங்கள் இரண்டு பேரும் கண்களால் பார்ப்பது, குட்டி குட்டி முத்தம் கொடுப்பது, இரண்டு பேரும் ஒன்றாக வளரும் அந்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் எடுத்துச் செல்வேன். ஒரு அம்மாவாக, ஒரு மகனாக நாங்கள் ஒன்றாக வளர்கிறோம், ஒன்றாக கற்றுக்கொள்கிறோம். எங்களுடைய இந்த வாழ்க்கை பயணத்தை இன்னும் நன்றாக போகனும் என்ற நம்பிக்கையை இருக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார். காஜலின் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.