தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், முன்னணி நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த படம் புலிக்குத்தி பாண்டி. இந்த படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து விக்ரம் பிரபு அவர்கள் தற்போது ‘டாணாக்கரன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் எஸ்ஆர் பிரபு தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தை இயக்குனர் தமிழ் இயக்கி இருக்கிறார். இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இயக்குநர் தமிழ் எடுத்திருக்கும் திரைப்படம் ‘டாணாக்கரன்’ சமீபத்தில் தான் ஓடிடியில் வெளியாகி இருந்தது. இந்த படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்நிலையில் தனது திரைப்பயணம் குறித்து இயக்குனர் தமிழ் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவரிடம் ‘டாணாக்கரன்’ படம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டது.
நிஜத்திலும் போலீசாக இருந்துள்ள தமிழ் :
நான் காவல்துறையில் 12 வருடங்கள் பணியாற்றினேன். அதற்குப் பிறகுதான் சினிமாவுக்குள் நுழைந்தேன். நான் பேட்ஜில் நடந்ததை மட்டும் வைத்து நான் இந்த படத்தை இயக்கவில்லை. இதற்கு முன்னதாக இருந்த பல்வேறு பேட்ஜ் நண்பர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் அனைத்தையும் தொகுத்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறேன். காவலர் பயிற்சிப் பள்ளியில் பல பிரச்சனைகள் இருக்கிறது. அதை தான் நான் படத்தில் காண்பித்திருக்கிறேன் என்று கூறி இருந்தார்.
படத்தில் ஒரு மரத்திற்கு காவலர் ஒருவர் காவல் காக்கும் காட்சி:
அந்த பேட்டியில், படத்தில் ஒரு மரத்திற்கு காவல் காக்கும் காவலர் குறித்த உண்மைத்தன்மை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தமிழ் ‘அந்த காட்சி அப்படியே மணிமுத்தாரில் நடந்த ஒன்று. மணிமுத்தாரில் பயிற்சி எடுத்தபோது யாரிடம் கேட்டாலும் அதற்கு பதில் சொல்வார்கள். உண்மையிலேயே நடந்தது தான். அதனால் தான் நான் படத்தில் காட்சியாக வைத்தேன். காவல்துறையில் இது போன்ற நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடக்கும். இந்த சம்பவத்தில் நானும் கூட இருந்திருக்கிறேன் என்று கூறி இருந்தார்.
ஜெமினி பாலத்தின் கதை :
அதே போல சென்னையிலும் இதே போல இன்று வரை நடந்து கொண்டு இருக்கிறது என்று கூறிய அவர் ‘அந்தக் கதையை நாம் பேசுகிறோம் அதே நேரத்தில் சென்னையில் என்றும் கல்லெறிந்தார்கள் என்பதற்காக ஜெமினி பாலத்தில் இன்று வரை எப்போதும் 4 போலீசார் காவலுக்கு நிற்கிறார்கள் அதை என்ன சொல்வீர்கள் அதுவும் இதே போன்ற ஒரு கதை தான். சித்திரை வெயில் 3 மணி நேரம் டூயட்டி, எவன் நிப்பான். அந்த பசங்களை பார்க்கும் போது எனக்கு கண்ணீர் தான் வரும்’ என்று கூறியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் :
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த மேம்பாலத்தில் மர்ம நபர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.இதில் நடு ரோட்டில் அந்த குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. குண்டு வெடித்ததில் அருகில் இருந்த கார் ஷோரூமின் கண்ணாடிகள் வெடித்து சிதறின. இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தால், தேனாம்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது என்பது கூறிப்பிடத்தக்கது.