நிவேதா பெத்துராஜ், திரிஷா போன்ற நடிகைகளை பற்றிய மோசமான கமன்ட் செய்த தொகுப்பாளினி – எதிர்ந்த எதிர்பால் வீடீயோவை நீக்கிய கலைஞர் டிவி.

0
3803
Vj
- Advertisement -

சோசியல் மீடியாவில் ஆண்களும், ஒரு சில பெண்களும் மாறி மாறி பெண்கள் மீது தவறான கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். நாளுக்கு நாள் பெண்கள் குறித்து சோசியல் மீடியாவில் எழும் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை. குறிப்பாக சினிமா துறையை சேர்ந்த பெண்களை பயங்கரமாக கலாய்த்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் கருத்துகளை வெளியிட்டும் வருகிறார்கள். தற்போது சினிமா துறையில் உள்ள நடிகைகளின் தோற்றம் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை இழிவுபடுத்தி பேசுவதை ஒரு வழக்கமாக கையாண்டுள்ளார்கள். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் சில நடிகைகளின் மீது கேவலமான கருத்துகளை திணித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

நாளை இயக்குனர், கானா குயில், மானாட மயிலாட புதுமையான நிகழ்ச்சிகளை கொடுத்துள்ளது கலைஞர் டிவி. தற்போது இந்த பிரபல சேனல் சினிமா தொடர்பான ஒரு நிகழ்ச்சியை தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகைகளை குறித்து ஆபாச வார்த்தைகளையும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் கலாய்த்து உள்ளார்கள். அப்படி அவர் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அதில் அவர் கூறி இருப்பது, நடிகை திரிஷா அவர்கள் திருமணத்திற்கு தயார் என்று சொல்லி உள்ளார். உங்களுக்கு மாப்பிள்ளை கிடைத்தால் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று திரிஷாவை கிண்டல் செய்து சந்தானம் படம் காமெடியை பதிவிட்டு உள்ளார். அதே போல் அவர் நடிகை நிவேதா பிந்துராஜ் பற்றி கூறியது, சமீபத்தில் நடந்த பேட்டியில் நிவேதா பிந்துராஜ் அவர்கள் காதல் குறித்துக் கூறுங்கள் என்று சொன்னதற்கு, அவர் அது சொல்ல முடியாத இடத்தில் ஏற்படுகிற வலி என்று வருத்தத்துடன் சொல்லியிருந்தார்.

காதலுக்காக இவ்வளவு ஆழமான விளக்கத்தை யாராலும் சொல்ல முடியாது. இவங்களுக்கு தான் சொல்ல முடியாத இடத்தில் செம்மையா அடி பட்டிருக்கும் போல என்று கூறி வடிவேலுவின் காமெடியை போட்டு உள்ளார். இவர்கள் மட்டும் இல்லாமல் பல நடிகைகளை கிண்டல், கேலி செய்து பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த பலர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதும் ஒரு பெண் தானே. ஒரு பெண்ணாக இருந்து இன்னொரு பெண்ணை பங்கமாக கலாய்ப்பதா?? என்று நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement