சினிமாவில் ஹீரோவாக நடிக்க போகும் கலக்கப்போவது யாரு புகழ் பிரபலம்.!

0
259

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜோடி நவீன் மற்றும் சதீஷ். இவர்கள் இருவரும் இணைந்து செய்த காமெடிக்கள் இன்றளவும் இணையத்தில் கலக்கி கொண்டு வருகிறது.

Naveen-Actor

இதில் சதீஷ் ஏற்கனவே ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் தற்போது நவீனும் ஒரு படத்தில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார். இது குறித்து பேசிய அவர், பிரச்னைகள், மன உளைச்சல் என இருந்த நான் இப்போதுதான் கொஞ்சம் இளைப்பாறி இருக்கிறேன்.

- Advertisement -

கிட்டத்தட்ட இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும். அந்தப் படத்திற்காக இடையில் என் உடல் எடையைக் குறைத்தேன். அதன் பிறகு கவனம் செலுத்தாததால் மறுபடியும் எடை கூடிவிட்டது. மீண்டும் அதைக் குறைக்கும் முயற்சியில் இருக்கிறேன்

நவீன்

இரண்டு படங்களில் கமிட் ஆகியிருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்புதான் இரண்டு படங்களுக்கும் கையொப்பமிட்டு நடிக்க ஆரம்பித்திருக்கிறேன். இந்த வருடம் முடிவதற்குள் நான் நடித்த ஒரு படமாவது ரிலீஸ் ஆகும்.  எனக்கு காமெடி ரோல் எல்லாம் செட் ஆகாதுங்க. அதனால் படத்தில் கிட்டத்தட்ட லீட் ரோல் மாதிரியான ஒரு ரோலில்தான் நடிக்கிறேன். அடுத்த மாதம் அந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும்

Advertisement