28 வயதில் சினிமா என்ட்ரி, 24 வருடங்கள் சினிமா வாழ்க்கையில் 100 படம் மட்டுமே ,52 வயதில் மரணம், இறந்த பின் வெளியான கடைசி படம் – நினைவு நாளில் அறிவோம் கல்லாப்பெட்டி சிங்காரத்தை.

0
2590
kallapettisingaram
- Advertisement -

சினிமா என்றாலே நடிப்பு, அழகு, ஆக்சன் ஆகியவற்றால் பலபேர் பிரபலமடைந்து இருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் தாண்டி பலர் தங்களின் குரல் வளத்தினால் சினிமா உலகில் பிரபலம் அடைந்து உள்ளனர். பொதுவாகவே சினிமா உலகில் நடிகர், நடிகைகளுக்கு மொழி மற்றும் குரல் பிரச்சினைகளால் டப்பிங் ஆர்டிஸ்ட் குரல் கொடுப்பார்கள். இது காலங்காலமாக நடந்து வருகின்ற ஒன்று. ஆனால், சிலர் தங்களுடைய தனித்துவமான சொந்த குரலில் பேசி ரசிகர்களின் மனதில் இடமும் பிடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் தன்னுடைய வித்தியாசமான உடல் மொழியாலும் வித்யாசமாக வசன உச்சரிப்பாளரும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகர்களின் பட்டியல் .கல்லாப்பெட்டி சிங்காரத்திற்கும் ஒரு முக்கிய இடமுண்டு. தமிழ் சினிமாவில் வெளியான மோட்டார் சுந்தரம்பிள்ளை, சுவரில்லாத சித்திரங்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், எங்க ஊரு பாட்டுக்காரன், பூவிலங்கு, இன்று போய் நாளை வா, ஒரு கை ஓசை, கதாநாயகன் போன்ற 100-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

மேலும், இவர் சொந்தமாக நாடகக்குழு வைத்து பல நாடகங்களை மேடையேற்றியவர். முதன் முதலாக இவர் 1966 ஆம் ஆண்டு வெளியான மோட்டார் சுந்தரம் பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து காவல்காரன் அத்தை மகள் சொர்க்கம் மறுபிறவி எடுப்பார் கைப்பிள்ளை குமார விஜயம் போன்ற பல்வேறு படங்களில் நடித்தார். சினிமாவில் அறிமுகமான 9 ஆண்டுகளில் இவர் 7 படங்களில் மட்டுமே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பாக்கியராஜ் இவரை தனது படத்தில் நடிக்க வைத்த பின்னர் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் இயக்குனர் பாக்யராஜிடம் அறிமுகமானபோது, ​​இவரது வெளிப்படையான அம்சங்கள், நடிப்பு நடை மற்றும் உடல் மொழி ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார். அப்போது பாக்கியராஜ் ஒரு உதவி இயக்குனராக மட்டும் தான் இருந்தார். பின்னர், பாக்யராஜ் ஒரு வெற்றிகரமான இயக்குநராக ஆனதும் இவருக்கு தன் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

-விளம்பரம்-

பாக்யராஜ் இயக்கிய முதல் படமான சுவரில்லா சித்திரங்கள் படத்தில் இவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரத்தை அளித்து இருந்தார். இதனை தொடர்ந்து சிங்காரத்துக்கு தனது படங்களில் நடிக்க பல வாய்ப்புகளை வழங்கினார் பாக்யராஜ். அதனைத் தொடர்ந்து இவருக்கு ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் இவர் நடித்த பல்வேறு காமெடி காட்சிகள் ரசிகர்களால் இன்றும் மறக்க முடியாது.

இறுதியாக இவர் கார்த்தி நடிப்பில் வெளியான கிழக்கு வாசல் படத்தில் நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படம் வெளியாகும் ஒன்றரை 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி இவர் உடல்நல குறைவால் தனது 52வது வயதில் காலமானார். 28 வயதில் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் ஆனாலும் இவருக்கு சினிமாவில் எந்த ஒரு பெரிய விருது பட்டங்களும் கிடைக்கவில்லை இருப்பினும் இவரது பெயர் என்றும் நிலைத்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Advertisement