கமலின் அடுத்த படத்தை இயக்கும் பிளாக் பஸ்டர் இயக்குனர், அவரே சொன்ன அப்டேட் – யாருன்னு நீங்களே பாருங்க

0
291
kamal
- Advertisement -

கமலின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். தற்போது இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-
Vikram Trailer Kamal Lokesh Kanagaraj | விக்ரம் ட்ரைலர்

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் இன்று வெளியாகியிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு பின் கமலஹாசன் படம் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திரையரங்கில் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது.

- Advertisement -

படத்தின் கதை:

இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. படத்தில் கமலின் மகனாக காளிதாஸ் நடித்திருக்கிறார். கமல் தன்னுடைய மகனை படும் சிரமங்கள் உடன், பாசத்துடன் வளர்கிறார். ஆனால், போதை பொருள் கடத்தல் கும்பலால் கமலின் மகன் கொல்லப்படுகிறான். இதை அறிந்த கமல் தன் மகனைக் கொன்றவர்களைத் பழிவாங்க நினைக்கிறார். தந்தையாக களத்தில் கமல் இறங்கி துவம்சம் செய்கிறார்.

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி | Vijay Sethupathi In Vikram

படத்தில் நடிகர்கள் பற்றிய தகவல்:

அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமே படத்தின் கதை. நான்காண்டுகளுக்கு பின் கமல் கம்பேக் கொடுத்திருக்கிறார். மேலும், படத்தில் மோசமான வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இவருக்கு சிவானி, மகேஸ்வரி, மைனா என்ற மூன்று மனைவிகள் இருக்கிறார்கள். வெளிநாட்டுக்கு போதைப்பொருட்கள் அனுப்புவதில் கைதேர்ந்தவர் விஜய் சேதுபதி. அவர் அறிமுக காட்சியே பயங்கர மாஸாக இருந்தது. இவரை அடுத்து அமர் என்ற சிறப்பு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

விக்ரம் படம் குறித்த தகவல்:

இவர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் என்று சொல்லலாம். படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது. அனிருத்தின் இசை மெய்சிலிர்க்க வைத்து இருக்கிறது. பின் படத்தில் சூர்யா வரும் காட்சியை ரசிகர்கள் கொண்டாடி இருக்கிறார்கள். அந்த அளவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜ் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. இந்த நிலையில் விக்ரம் படத்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கமலின் அடுத்த படம் குறித்த அப்டேட்:

அதாவது கமல் அவர்கள் விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதில் விஜய் டிவியின் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கமல் கலந்து கொண்டு இருந்தா. அப்போது அவர் அடுத்த படம் குறித்த அப்டேட்டை சொல்லியிருக்கிறார். அது என்னவென்றால், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் கமலின் அடுத்த படத்தை மாலிக் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மகேஷ் நாராயணன் தான் இயக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து படம் குறித்த அப்டேட் கேட்டு வருகிறார்கள்.

Advertisement