பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்த்துவிட்டு எச் ராஜா கொடுத்த விமர்சனம் – இதோ வீடியோ

0
362
- Advertisement -

பொன்னியின் செல்வன் படம் குறித்து பாஜகவின் மூத்த தலைவர் ஹச் ராஜா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் வித்தியாசமான படைப்புகளின் மூலம் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கால கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருக்கிறார் மணிரத்தினம்.

-விளம்பரம்-
ponniyin

இதனை பல பேர் முயற்சித்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்தினம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் 2:

இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக சமீபத்தில் தான் வெளியாகி இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படம் பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் எனும் என பலரும் பாராட்டி வருகிறார்கள்.

படம் குறித்த தகவல்:

அதோடு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவி, வந்திய தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யாராய் என ஒவ்வொரு கதாபாத்திரங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் குறித்து எச். ராஜா அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

எச். ராஜா அளித்த பேட்டி:

அதில் அவர், பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பகுதி எல்லாவற்றையும் நாம் வரவேற்க வேண்டும். சோழப் பேரரசு ஒரு பெரிய பேரரசு. பெரும் வளம் கொண்ட பேரரசு. படித்தால் தான் மற்ற இடங்களில் தமிழன் மதிப்பு உயரம், மற்ற இடங்களுக்கு தமிழை கொண்டு செல்ல முடியும். நாம் நம்முடைய ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு முன்பாக இருந்த ஒரு காலத்தை இந்த படம் காட்சிப்படுத்தி இருக்கிறது. படம் எளிமையாக எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் பங்கு கொண்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படத்தை நம்மை ஆர்வத்தோடு பார்க்க வைப்பது நம் கலாச்சாரமும் பழமையும் தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement