குணா படத்தின் போது கிடைத்த மண்டை ஓட்டை ஹேராம் படத்தில் பயன்படுத்தினேன் – மஞ்ஞம்மெல் பாய்ஸ்ஸை அலறவிட்ட கமல்.

0
487
Kamal
- Advertisement -

மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினருடன் கமலஹாசன் உரையாடி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைராக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே மஞ்சுமெல் பாய்ஸ் படம் குறித்து தான். மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படம் கடந்த 22 ஆம் தேதி தான் வெளியாகியிருந்தது. இந்த படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தில் கேரளாவில் மஞ்சுமெல் என்ற பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றார்கள். அங்கு குணா குகையில் எதிர்பாராத விதமாக ஒருவர் சிக்கி கொள்கிறார். அவருடன் வந்த நண்பர்கள் எப்படி அவரை காப்பாற்றுகிறார்கள் என்பதை படத்தின் கதை. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. சொல்லப்போனால், மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பாராட்டைப் பெற்று வருகிறது. மேலும், இந்த படம் முழுக்க முழுக்க கொடைக்கானலில் உள்ள பகுதிகளில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்த படம் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

- Advertisement -

மஞ்சுமெல் பாய்ஸ் படம்:

நடிகர் கமலஹாசனின் நடிப்பில் வெளிவந்து பிரபலமான படங்களில் ஒன்று குணா. நீண்ட இடைவெளிக்கு பின் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகை இடம்பெற்றிருக்கிறது. பிரபலங்கள் பலருமே இந்த படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் கமலஹாசனை படத்தின் இயக்குனர் சிதம்பரம் மற்றும் பட குழுவினர் நேரில் சந்தித்து அவரிடம் வாழ்த்துக்களை பெற்று போட்டோ எடுத்திருக்கிறார்கள். பின் படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறது. மேலும், இது தொடர்பாக ராஜ் கமல் பிலிம்ஸ் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறது.

கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ:

அதில் கமல்ஹாசன், மஞ்சுமேல் பாய்ஸ் படம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அதில் நான் வருவதால் மட்டும் இல்லை. காதல் என்பது நட்புக்கும் பொருந்தும். மொஹப்பத் என்ற வார்த்தை நட்புக்கு பயன்படுத்தப்படுகிறது. நாம் மட்டும் தான் நட்பையும் காதலையும் வேறுவேறாக பார்ப்பது கிடையாது. குணா படம் எடுக்கும்போது எங்களுக்கும் ஒரு சிறப்பான அனுபவம் இருந்தது. உங்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். குணா குகையில் இருக்கும் பாறை சமீப காலத்தில் உருவானது தான். மலை ஏறுவதைப் போல் அந்த பாறையில் ஏறி விட முடியாது.

-விளம்பரம்-

குணா குகை குறித்து சொன்னது:

அந்த குகையில் நிறைய குரங்கு குட்டிகள் விழுந்து இறந்திருக்கிறது. அந்த இடத்திலிருந்து எடுத்த குரங்குகளின் மண்டைகள் இன்னும் என்னிடம் இருக்கின்றது. ஹேராம் படத்தில் அதை நான் பயன்படுத்தி இருக்கிறேன். அந்த குகைக்குள் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். சிலர் அங்கு சிறுத்தை, மலைப்பாம்பு இருப்பதாக கூட சொல்கிறார்கள். அங்கு என்ன இருக்கிறது என்று தெரியாமல் இருப்பது தான் அந்த இடத்தினுடைய மர்மமாக இருக்கிறது. கொடைக்கானலில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் இதே மாதிரியான நிறைய இடங்களில் இருக்கிறது.

குணா படம் உண்மையான பெயர்:

மேலும், குணா படத்திற்கு முதலில் மதிகெட்டான் சோலை என்றுதான் பெயர் வைக்கலாம் என்று நினைத்தோம். அந்தப் டைட்டிலை அனைவருமே வேணாம் என்று சொன்ன பிறகு தான் குணா குகை என்று பெயர் வைத்தோம். தற்போது இருக்கும் குணா தொகை நிறையவே மாறிவிட்டது. அந்த காலத்தில் குணா குகைக்கு செல்வதற்கான வழி எதுவுமே கிடையாது. அதற்கான வழியை நாங்கள் தான் அமைத்தோம். அதேபோல் கண்மணி அன்போடு பாடல் இளையராஜாவும் நானும் ஒருவருக்கொருவர் எழுதிக் கொண்ட ஒரு காதல் கடிதம் தான் என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Advertisement