விஜய் சேதுபதியின் வாழ்வில் Best என்ட்ரி என்று பேசப்படும் இந்த காட்சியை கூட கமல் படத்தில் இருந்து எடுத்துள்ள லோக்கி. வேற லெவல்யா.

0
706
Vikram
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது நேற்று இந்த திரைப்படம் ஹாட்ஸ்டார் இல் வெளியான போதிலும் இன்னமும் பல்வேறு திரையிடங்களில் இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது

-விளம்பரம்-

விக்ரம் படத்தில் கமலஹாசன், பகத் பாசிலுக்கு சவால் கொடுக்கும் அளவிற்கு சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து இருப்பார். அவருடைய ஆரம்ப காட்சி முதல், இறுதிக் காட்சிவரை பயங்கரமான வில்லத்தனமும், நக்கலான பதில்களும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு பார்த்திராத ஒரு பாடி லாங்குவேஜில் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்து இருப்பதை பார்க்க முடிகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : தாடி மீசை என்று பிரபுதேவா போலவே இருக்கும் அவரின் மகன் – மறைந்த நடிகர் பாண்டுவுடன் இறுதியாக அவர் எடுத்த போட்டோ.

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் என்ட்ரி படு மாசாக அமைந்திருந்தது இதுவரை விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்த படத்திலேயே இதுதான் சிறந்த என்ட்ரி என்று கூட ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள் ஆனால் இதுவும் கமல் படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் சுட்ட ஒரு விஷயம் தான் என்பது பலர் அறிந்திராத ஒன்று அது வேறு எந்த படமும் இல்லை கமல் நடிப்பில் வெளியான குணா படம் தான்

-விளம்பரம்-

விஜய் சேதுபதிக்கு கமலின் ரெஃபரன்ஸ் :

இந்தப் படத்தில் பழைய விக்ரம் படத்தில் இருந்து நிறைய விஷயங்களை தொடர்ச்சியாக வைத்ததோடு மட்டும் அல்லாமல் வெவ்வேறு படங்களில் இடம்பெற்ற விஷயங்களை கூட லோகேஷ் கனகராஜ் வைத்திருந்தார் அதிலும் குறிப்பாக தமிழுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ராடு ஒன்று வைக்கப்பட்டு இருக்கிறது அந்த வசனத்தைக் கூட படத்திற்கு பொருந்தும் வகையில் வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ் இப்படி கமலுக்கு மட்டுமல்லாமல் விஜய் சேதுபதிக்கு கூட கமல் ரெஃபரன்ஸை பயன்படுத்தி இருக்கிறார்

கமலின் குணா :

குணா திரைப்படத்தில் நாயகியை கமலஹாசன் காரில் கடத்திச் சென்று ஒரு மலையில் அடைத்து வைத்திருப்பார் அப்போது கமலுக்கு தெரியாமல் காரை எடுத்துக் கொண்டு கதாநாயகி தப்பிக்க பார்ப்பார் அந்த காட்சியில் கமல் உண்மையாகவே அந்த ஆறின் மீது மோதி விடுவார் அடுத்த காட்சியிலேயே கமல் காரில் படுத்தபடியே பல்டி அடித்துக்கொண்டு கீழே இறங்கி நிற்பார் இதே போலத்தான் விஜய் சேதுபதியின் என்ட்ரியையும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் வடிவமைத்து வைத்திருக்கிறார்

சந்தனமாக முதலில் நடிக்க இருந்தது :

இது ஒருபுறம் இருக்க விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்த சந்தானம் கதாபாத்திரத்தில் முதலில் பிரபுதேவா அல்லது லாரன்சை தான் நடிக்க வைக்கலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்திருந்தார்கள். பின்னர் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகு தான் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி வந்தார். ஆனால், கண்டிப்பாக இவர்கள் இருவருக்கும் விஜய் சேதுபதி அளவிற்கு மாஸ் செய்து இருக்க முடியாது என்பதே உண்மை.

Advertisement