34 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2வில் விவேக்கிற்கு வாய்ப்பு கொடுத்தது ஏன் – விவேக் குறித்து கமல் வெளியிட்ட வீடியோ.

0
1237
vivek

சனங்களின் கலைஞனாக இருந்த சின்னக் கலைவானர விவேக் நேற்று (ஏப்ரல் 17) காலமான சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விவேக்கின் இறப்பிற்கு பலர் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் விவேக்குடன் ஒரு படங்களின் கூட நடிக்காத நடிகர் கமல் ஹாசன், விவேக் மரணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து இருந்தார். அதில், நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று பதிவிட்டு இருந்தார்.

விவேக் இத்தனை ஆண்டுகளில் ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என்று பல்வேறு முன்னணி படங்களில் நடித்துவிட்டாலும் கமலுடன் நடிக்காதது ஒரு குறையாகவே இருந்தது. கமல் நடித்த ‘தெனாலி’ படத்தில் கூட நடிகர் விவேக் நடிப்பதாக இருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் நடிகர் விவேக்கால் நடிக்க முடியாமல் போனது. இப்படி ஒரு நிலையில் தான் கமலின் ‘இந்தியன் 2’ படத்தில் விவேக்கிற்கு வாய்ப்பு கிடைத்தது.

இதையும் பாருங்க : எதுக்கு இந்த கேவலமான விளம்பரம் – விவேக் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்த ரம்யாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள். இதான் காரணம்.

- Advertisement -

முதன் முறையாக கமலுடன் நடிக்கிறோம் என்று மிகந்த மகிழ்ச்சியில் இருந்த விவேக்கிற்கு அந்த ஆசை நிறைவேறுதற்குள் காலம் முடிந்துவிட்டது. இப்படி ஒரு நிலையில் நடிகர் விவேக்கின் இறப்பு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கமல், விவேக்குடன் இந்தியன் 2வில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில், நாங்கள் இருவரும் ஒரு குருவிடம் இருந்து வந்த மாணவர்கள் தான்.

என்னுடன் நடிக்க முடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. நீங்கள் அரசியலுக்கு போய்ட்டா உங்க கூட நடிக்க முடியாமே போய்டுமேன்னு பயந்தாரு, அதனால் தான் அவர் இந்தியன் 2 வில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். படப்பிடிப்பில் நிறைய பேசினோம், இன்னும் பேச நிறைய விஷயம் இருக்கிறது என்று சொன்ன அந்த உரையாடல் அப்படியே நிற்கிறது. அந்த கனம் என் மனதில் இருக்கிறது என்று கூறியுள்ளார் கமல்.

-விளம்பரம்-
Advertisement