விஜய் அரசியல் பேச்சுக்கு கமல் செய்தியாளர்களிடம் என்ன சொன்னார் தெரியுமா..?

0
270
Kamal

நடிகர் விஜய் சர்கார் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசியதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், பல்வேறு அரசியல் வாதிகளும் விஜய் பேசியதை கடுமையாக விமர்சனமும் ஆதரவும் எழுந்த வண்ணம் இருக்கிறது.

Actor-vijay

சர்கார் படத்தின் இசை வெளியிட்டு விழா ஒரு இசை வெளியிட்டை போல அல்லாமல் நடிகர் விஜய்யின் மாநாடு போலே இருந்தது. அதிலும் இந்த விழாவில் பேசிய விஜய்,தமிழ் நாட்டை நல்லவர்கள் ஆள வேண்டும் என்றும், நான் முதலமைச்சராக வந்தால் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார். விஜய் பேசியதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் நடிகரும் மக்கள் நீதி மன்றத்தின் தலைவருமான கமல் விஜய் பேசியதை வரவேற்றுள்ளார்.

சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல், தம்பி விஜய் அரசியலுக்கு வர ஆர்வம் இருந்தால் வரலாம். அதை நான் வரவேற்பேன். ஊழலுக்கு எதிரான கட்சியாக வந்தால் கண்டிப்பாக வரவேற்பேன் என்று கூறியிருந்தார்.

Kamal

கமல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேலும், ஊரூராக சென்று மக்களை சந்தித்து தனக்கான ஆதரவை பெருக்கி வருகிறார் கமல். விஜய் இன்னும் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற அறிவிக்கவே இல்லாத நிலையில் தற்போது கமல் அவர்கள் விஜயை அரசியலுக்கு வரவேற்றுள்ளார்.