உலக நாயகன் கமலுக்கு அறுவை சிகிச்சை. மருத்துவமனையில் நாளை அனுமதி.

0
5489
kamal
- Advertisement -

சினிமா திரை உலகில் நடிப்பில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் உலக நாயகன் கமலஹாசன். மேலும், உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதன் மூலம் இவர் மக்களுக்கு பல உதவிகளை செய்தும் வருகிறார். அதோடு கமல்ஹாசன் அவர்கள் அரசியலில் தீவிரமாக களம் இரங்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் தன் உயிர் நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களுடன் நம்மவரும் சேர்ந்து அரசியலில் ஒரு கலக்கு கலக்க போகிறார்கள் எனவும் தெரிய வந்து உள்ளது. இதை தொடர்ந்து நம்ம உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “இந்தியன் 2” படத்தில் பிஸியாக உள்ளார். இப்படி நம்ம உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடன் பட வேலைகளிலும்,அரசியலிலும் பயங்கர பிஸியாக இருந்தார். இதனைத்தொடர்ந்து சமீபத்தில் தான் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை கவுரவிக்கும் விதமாக “உங்கள் நான்” என்ற விழா ஒன்று நடந்தது.

-விளம்பரம்-
Image result for actor kamal"

- Advertisement -

இந்த விழா உலகநாயன் அவர்கள் திரை உலகில் தன் பயணத்தை தொடங்கி 60 ஆண்டுகள் ஆனது. அதை கொண்டாடும் விதமாக இந்த விழா சிறப்பாக நடந்தது. இப்படி என்னேரமும் பிஸியாகவே இருக்கும் நம்ம உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் காலில் அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற இருப்பதாக தகவல் வந்து உள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மையத்தின் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். மேலும், அதில் குறிப்பிட்டு இருப்பது,கடந்த 2016 ஆம் ஆண்டு நம்மவருக்கு எதிர்பாராத விதமாக ஒரு விபத்து நடந்தது. இந்த விபத்தின் காரணமாக நம்மவர் அவர்களின் வலது காலில் முறிவு ஒன்று ஏற்பட்டது. மேலும்,இந்த முறிவினை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் பாருங்க: அம்மாவை இழந்த தங்கைக்கு தாயை போல திருமணம் நடத்தி அழகு பார்த்த நாஞ்சில் விஜயன்.

அதோடு அவரது காலில் டைட்டேனியம் கம்பி ஒன்று பொருத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நம்மவர் எப்போதும் அரசியலிலும், சினிமாவிலும் பிஸியாக இருப்பதால் அந்த கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில் மருத்துவர்கள் இதை உடனே அகற்ற வேண்டும் என்றும் கூறி இருந்தார்கள். அதற்காக நம்மவர் அந்த கம்பியை அகற்றும் சிகிச்சையில் உள்ளார். மேலும்,நம்மவர் சிகிச்சை நடந்த பிறகு சில நாட்கள் ஓய்வு எடுப்பார். பின் நம்மவர் நம்மை சந்திப்பார் என்று கூறி இருந்தார். மேலும், சிகிச்சைக்குப் பிறகு சில வாரங்கள் அரசியல் பணிகள் மற்றும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் நம்மவர் கலந்து கொள்ள மாட்டார் என்றும் தெரிவித்தார்கள்.

-விளம்பரம்-

பொதுவாக சினிமா பிரபலங்களும், அரசியல்வாதிகளும் மருத்துவமனைக்கு சென்றாலே மக்கள் மத்தியில் பயங்கர பரபரப்பை கிளப்பி விடுவார்கள். அதுமட்டுமில்லாமல் சிகிச்சை என்றால் சொல்லவா?? வேண்டும். மேலும், கமலஹாசனின் அறுவை சிகிச்சை குறித்து பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். அதோடு நம்மவர் சீக்கிரம் உடல் நலம் அடைந்து வர வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

Advertisement