ரஜினிகாந்த் லாஸ் ஏஞ்சல்ஸில் 150 கோடி ரூபாயை சூதாடி இழந்து உள்ளளர் என சினிமா விமர்சகர் பிஸ்மி பரபரப்பு கருத்து ஒன்றை கூறியிருந்தார். தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த வாரம் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
ஜெயிலர் படம்:
இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் படத்தின் இருக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த படம் வெளியான முதல் நாளிலேயே பெரிய அளவில் சாதனை படைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்த படம் லோகேஷ் கனராஜ் இயக்க போவதாக அதிகார்பபூர்வ தகவல்கள் வெளியாகி வந்தது.
அவர் கூறியது:
ரஜினிகாந்த் 10 வருடங்களுக்கு முன்பு கூட பழைய மாடல் அம்பாசிடர் காலத்தில் பயன்படுத்தி வந்தார். அதன் பின்புதான் இன்னோவா கார்விற்கு மாறினார் அந்த நிலையில் கலாநிதி மாறன் அளித்த கார் வந்தது அவருக்கு அதன் பின்பு தான் பணக்காரர் காலத்தில் உணர்வு வந்திருக்கும். ரஜினிகாந்திடம் உள்ள கோடிகளை என்பதற்கு நம்முடைய இரண்டு கைகள் பத்தாது. அவ்வளவு கோடி பணத்தை அவர் அடுக்கி வைத்துள்ளார்.
அவ்வளவு இருந்தாலும் அவர் மனதளவில் எளிமையாக தான் இருந்து வருகிறார். வருமானமாக வாங்கிய பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் லாஸ் ஏஞ்சலுக்கு சென்றவர்கள் சூதாட்டத்தில் 150 கோடிகளை இழந்து மன நிம்மதியோடு இருக்கும் வாழ்க்கை தான் அவர் வாழ்ந்து வருகிறார். அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழும் அவர் காருக்குள் போனால் மட்டுமே பணக்காரர் போல உணர்வு கொண்டு வந்து விடாது. அவர் லாஸ் ஏஞ்சலுக்கு சென்று அங்கு அமர்ந்து போதே அவர் பணக்காரர் தான்.
அவரிடம் எவ்வளவு கோடிகளில் உள்ளது என்பது அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் அவருடைய ஆடிட்டர்க்கு மட்டுமே தெரியும். தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் ரஜினிகாந்த் தான். அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் பணத்தை இழந்தது தவறு அவர் வேறு ஏதும் ஊதாரித்தனமாக செலவு செய்யவில்லை அவர் அப்பொழுது செய்த முதலீடுகள் தற்போது பல்லாயிரம் கோடிகளாக மாறி உள்ளது என்றும் சினிமா விமர்சகர் பிஸ்மி கூறியிருந்தார்.