உயிர் பிழைத்து வந்த சமயத்தில் மீண்டு வர உதவிய விஜய். மறக்காமல் விஜய்க்கு நாசர் மகன் காட்டியுள்ள நன்றி.

0
296
- Advertisement -

தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக நாசரின் மகன் இணைந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்தபடி விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டார். இவர் தன்னுடைய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயர் அறிவித்ததில் இருந்தே மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதோடு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை.

-விளம்பரம்-

மேலும், 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார். முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாகுவதாகவும் அறிவித்து இருக்கிறார். பின் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலியை தமிழக வெற்றி கழகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த செயலியை சில தினங்களுக்கு முன்பு தான் விஜய் அவர்கள் தோழர்களாய் ஒன்றிணைவோம் என்று கூறி ஆரம்பித்து வைத்திருக்கிறார். இத்தொடர்பான வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் படு வைரலாகி இருந்தது.

- Advertisement -

விஜய் கட்சியில் இணைந்த நாசர் மகன்:

இதை அடுத்து மூன்று நாட்களிலேயே 50 லட்சம் உறுப்பினர்கள் இந்த கட்சியில் இணைந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் நாசரின் மகன் ஃபைசல் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக இணைந்து இருக்கிறார். நாசர்- கமீலா ஆகியோரின் மகன் தான் ஃபைசல். இவரது மூத்த மகனான பைசல் கடந்த 2014 ஆம் ஆண்டு கோரமான விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் பைசலுடன் பயணித்த இரண்டு நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பைசல் மட்டும் மண்டையில் கடுமையாக காயத்துடன் மருத்துவமணையில் அனுமதிக்கபட்டார்.

நாசர் மனைவி கமீலா பேட்டி:

நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் உயிர்பிழைத்த பைசலுக்கு யாரும் நினைவிற்கு வரவில்லை. இருந்தாலும், விஜய் மட்டும் தான் அவருடைய ஆழ்மனதில் பதிந்து இருக்கிறார். விஜயின் தீவிர ரசிகர் பைசல் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜயும் அடிக்கடி நாசரின் மகனை நேரில் சந்தித்து பேசி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நாசரின் மகன் பைசல் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக இணைந்திருப்பது குறித்து நாசர் மனைவி கமீலா, என்னுடைய மகன் பைசல் சின்ன வயதிலிருந்து விஜய் சாரோட வெறித்தனமான ரசிகன்.

-விளம்பரம்-

விஜய் குறித்து சொன்னது:

சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் அவன் எங்களை மறந்து விட்டான். ஆனா, விஜய் சார் மட்டும்தான் அவனுடைய நினைவில் இருந்தார். அவன் குணமாக வேண்டும் என்பதற்காக விஜய் சார் எங்கள் வீட்டுக்கு வந்து அவனைப் பார்த்துக் கொண்டு ஆறுதல் சொல்லிட்டு போனார். அவன் இன்று மீண்டு வந்திருக்கிறான் என்றால் அதற்கு விஜய் சார் தான் முக்கிய காரணம். இப்போ விஜய் சார் கட்சி ஆரம்பித்திருக்கிறார். கட்சியில் இணையை சொல்லி அழைப்பு விடுத்திருந்ததை என் மகன் பார்த்து இம்ப்ரஸ் ஆகிவிட்டான். உடனே கட்சியில் சேர்ந்தே ஆகணும் என்று உற்சாகத்துடன் சொன்னான். அவனோட விருப்பத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.

விஜய் அரசியல் குறித்து சொன்னது:

விஜய் சார் அரசியலுக்கு வந்ததை வரவேற்கணும். இப்ப இருக்கிற சூழலில் ஒரு மாற்றம் தேவை. சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார். அதை நாம் எல்லோரும் பாராட்டணும். விஜய் சார் ரெண்டு வரியில் அறிக்கை விட்டிருக்கிறார் என்று கிண்டல் பண்றாங்க. அவர் இன்னும் அரசியலில் முழுசா இறங்கவில்லை. அறிக்கை என்பது மூன்று, நான்கு பக்கம் விடனும் என்று அவசியம் கிடையாது. சமூகவலைத்தளங்களில் அரசியல்வாதிகள் ரெண்டு வரியில் கருத்து சொல்கிறார்கள். அதுக்கு என்ன சொல்றீங்க? அவர் அரசியலுக்கு இன்னும் வரவில்லை. அதனால் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். கட்சி ஆரம்பித்ததற்க்கு விஜய் சாரை நேரில் பார்த்து வாழ்த்து சொல்லணும். விஜய் சாரை நிறைய இளைஞர்கள் பாலோ பண்றாங்க, அப்படிப்பட்ட அவரோட கட்சியில் என் மகன் சேர்ந்ததில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்தான் என்று கூறி இருந்தார்.

Advertisement