இதெல்லாம் சொல்லிக்கொடுத்தது என் ஆசான் கலைஞர்னு மறந்துடாதீங்க – ‘பிச்சை’ சர்ச்சை குறித்து குஷ்பூ வெளியிட்ட வீடியோ.

0
192
- Advertisement -

தமிழக அரசு வழக்கும் பெண்கள் உதவித்தொகையை பிச்சை என்று விமர்சனம் செய்ததற்கு குஷ்பூ எதிர்புகளை சந்தித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் ‘பிச்சை’ என்ற சொல்லுக்கு விளக்கம் அளித்துள்ளார் குஷ்பூ. போதைப் பொருள் கடத்தலை திமுக அரசு கண்டிக்க தவறவிட்டதை அடுத்து சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் எல்லாம் நடைபெற்றிருக்கிறது. இதில் குஷ்பூ கலந்து கொண்டு தலைமை தாங்கி இருக்கிறார். பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து, தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கிடம் மட்டும் சுமார் 3000 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

ஆனால், இதைப்பற்றி திமுக கூட்டணி கட்சிகள் ஏதாவது வாய் திறந்ததா? இல்லை. காரணம், அந்த ஜாபர் சாதிக் திமுகவுக்கும் பணம் கொடுத்திருக்கிறார்.இந்த விவகாரம் குதித்து முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார்? தமிழகத்தில் ஏற்கனவே நிறைய பிரச்சனைகள் இருக்கின்றது. இந்த நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் திமுகவுக்கு அவர்கள் ஓட்டு போட்டு விடுவார்களா?

- Advertisement -

மேலும், தாய்மார்களின் நீண்ட நாள் கோரிக்கையே டாஸ்மாக்கை இழுத்து மூடுவது தான். தில் இருந்தால் நீங்கள் அதை செய்யுங்கள் பார்க்கலாம். போதை பொருள் பிரச்சனையை நீங்கள் தீர்த்து வைக்கவில்லை.இப்படி குஷ்பூ மகளிர் உரிமை தொகையை பிச்சை என்று கூறிருப்பதால் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. இது குறித்து பலருமே, எப்படி நீங்கள் கூறலாம்? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள குஷ்பூ, உண்மை எப்படி இப்படி பயத்தை கிளப்பிவிடும்னு நான் நினைக்கல. நான் பேசிய பழைய வீடியோவை எல்லாம் எடுத்து போட்டு வராங்க. நான் சொன்ன விஷயத்தை பெண்கள் குறித்து தவறாக பேசியதாக திசை திருப்பிவிட்டார்கள். நான் தவறு செய்தால் குழந்தையாக இருந்தாலும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன். அரசியல் நாகரீகம், மேடை நாகரீகம், தைரியமாக பேசுவது என்று எல்லாம் சொல்லிக் கொடுத்தது என் ஆசான் கலைஞர் என்பதை மறந்துவிடாதீர்கள்’ என்றும் பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து பதிவிட்டு இருந்த குஷ்பூ ‘அறிவாலயம் தரகர்களுக்கு செய்திகளில் தங்கள் பெயர் வர குஷ்பூ தேவை. இல்லையென்றால் நீங்கள் தகுதியற்றவர் என்பதால் யாரும் கண்டுகொள்ளக்கூட மாட்டார்கள். 1982 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஏழைகளுக்கு வழங்கிய இலவச உணவை  ‘பிச்சை’ என்று முரசொலிமாறன் கூறியபோது, ​​இந்த சுயநல பாதுகாப்பற்ற குலத்தைச் சேர்ந்த யாரும் அதைக் கண்டிக்கவில்லை.

ஓசியில் கொடுப்பதால்தான் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் என்று பொன்முடி சொன்ன போதும், உயர்நீதிமன்ற மதுரை கிளையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கலைஞர் கருணாநிதி பிச்சையாக போட்டதாக வேலு சொன்னபோதும் நீங்கள் அனைவரும் குருடர்களாகவும், ஊமைகளாகவும், காதுகேளாதவர்களாகவும் இருந்தீர்களா?டாஸ்மாக்கில் உழைக்கும் மக்கள் செலவழிக்கும் பணத்தை சேமிக்க நமது பெண்களுக்கு உதவுங்கள்.

உங்கள் பணத்தை விட குடிகாரர்களால் அவர்கள் படும் வேதனையின் அளவு அதிகம். அவர்களை சுதந்திரமாக ஆக்குங்கள். அவர்களுக்கு உங்கள் 1000/- ரூபாய் தேவையில்லை. பெண்களை சுதந்திரமாக மாற்றினால் அவர்கள் கண்ணியத்துடன் வசதியாக குடும்பம் நடத்தும் அளவுக்கு சேமிப்பார்கள்.ஆனால் உங்கள் அடுத்த 14 தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இந்த உலகத்தில் உள்ள மற்றவர்களை விட திமுகவுக்குப் பணம் தேவை என்று நினைக்கிறேன்.’ என்று பதிவிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement