ஹாட் ஸ்டாரில் கனா காணும் காலங்கள் 2 – முக்கிய ரோலில் நடிக்கும் ஒரே ஒரு முன்னாள் சீசன் நடிகர். (மாஸ்டர் விஜய் மாதிரி ரோலாம்)

0
3274
- Advertisement -

புது கனா காணும் காலங்கள் தொடரில் இர்பான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்று தான் ‘கனா காணும் காலங்கள்’. இந்த சீரியல் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. பல்வேறு சீரியல்கள் இன்று சின்னத்திரையில் வந்தாலும் கனா காணும் காலங்கள் சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இது 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பப்பட்ட தொடர்.

-விளம்பரம்-

அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பி டாப்பில் இந்த தொடர் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. இந்த இரு தொடர்களும் வெற்றி தொடராக அமைந்தது. அதோடு இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர், நடிகைகள் தொலைக்காட்சிகளிலும், வெள்ளித்திரையிலும் பிரபலமானவர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.

- Advertisement -

கனா காணும் காலங்கள் சீசன் 2 ப்ரோமோ:

இப்படி ஒரு நிலையில் தற்போது கனா காணும் காலங்கள் தொடரின் இரண்டாவது சீசன் விரைவில் வர இருப்பதாக சோசியல் மீடியாவில் அதற்கான ப்ரோமோவும் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியிலும், அதிக எதிர்பார்ப்புடனும் இருக்கின்றனர். பயங்கர புத்தம் புது பொலிவுடன், புதுமுக நடிகர்களுடன் கனா காணும் காலங்கள் சீசன் 2 ப்ரோமோ வெளியாகி உள்ளது. மேலும், இந்த சீரியல் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் வருத்தத்துடன் உள்ளனர்.

கனா காணும் காலங்கள் ஒளிபரப்பாகும் தேதி:

டிவியில் ஒளிபரப்பாகி இருந்தால் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர். இந்த சீரியலில் டீச்சராக சன் மியூசிக் விஜே சங்கீதா நடித்திருக்கிறார். சமீபத்தில்தான் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கனா காணும் காலங்கள் 2 வெளியாக உள்ளது. வருகிற 22-ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது கனா காணும் காலங்கள் 2. சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் இதற்கான சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

கனா காணும் காலங்கள் 2 குறித்த தகவல்:

மேலும், மொத்தம் 10 சாப்டர் ஆக இதை ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரு சாப்டர் 13 எபிசோடுகள். அதாவது சுமார் 130 எபிசோடுகள் வரை இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. புதிய சீசன், புதிய கதை என்பதனால் டைரக்சன், நடிகர்கள், படக்குழு என எல்லாம் புதியவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், டிக்டாக், சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர்களை அதிகம் இதில் நடிக்க தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் எல்லோருக்கும் சர்ப்ரைஸாக புதிய கனா காணும் காலங்கள் தொடரில் இர்பான் மட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Vijay Tv Irfan Shares About His Experience In Rajavukku Check

ரீ-என்ட்ரி கொடுக்கும் இர்பான்:

இவர் ஏற்கனவே கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்தவர். பின் சரவணன் மீனாட்சியில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தபோது இவர் சீரியலை விட்டு வெளியேறி சினிமா பக்கம் போனார். பின் சில படங்களில் இர்பான் நடித்தார். பின் மீண்டும் ‘கனா’வுக்கு அழைப்பு வந்த போது மறுக்காமல் இர்பான் கமிட்டாகியிருக்கிறார். முதல் சாப்டரில் கடைசிப் பகுதியில் இவரது என்றி இருக்கும் என்கிறார்கள். மாஸ்டர் படத்தில் விஜய் நடித்த கேரக்டர் போன்ற ஒரு கதாபாத்திரம் தான் இவருக்கு என்று கூறப்படுகிறது. இர்பான் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் குஷியில் உள்ளார்கள்.

Advertisement