4-வது இடத்திற்கு தள்ளப்பட்ட விஜய்..! முதல் இடத்தை பிடித்த நடிகர்..! யார் தெரியுமா..?

0
1143
Vijay

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு எந்த அளவிற்கு மொவசு இருக்கிறது என்று தெரியும். விஜய் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு கொண்டாட்டமாகவே அமைந்து விடும். நடிகர் விஜய்க்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுகு,மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

theri

- Advertisement -

விஜய் படங்கள் சில மற்ற மொழி தொலைக்காட்சிகளிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பபட்டு தான் வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் சில இந்தி தொலைக்காட்சிகளில் விஜய்யின் “தெறி” படமும் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த “காஞ்சனா 3” படமும் ஒளிபரப்பானது.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல பார்க்(barc) என்ற நிறுவனம் ஒன்று இந்த வாரம் எந்த தொலைக்காட்சிக்கு அதிக டி ஆர் பி இருக்கிறது என்ற தகவலை வெளியிட்டிருந்தது. அதில் டாப் 5 பார்வையாளர்கள் கொண்ட தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் “காஞ்சனா 3” முதல் இடத்தை பிடித்துள்ளது.

Barc
Barc

தொலைகாட்சியில் அதிக பார்வையாளர்கள் கொண்ட பட்டியலில் சோனி மேக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மெர்சல்” படம் 4 வது இடத்தை தான் பிடித்திருந்தது. இதனால் “மெர்சல்” படத்தை விட “காஞ்சனா 3” படம் கடந்த வாரம் தொலைகாட்சியில் அதிக பார்வையாளர்கள் ரசித்த பட வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.