என் வாழ்க்கைல நான் செஞ்ச மிகப்பெரிய தவறு காஞ்சனா படத்துல நடிச்சதுதா – திருநங்கை பிரியா ஷாக்கிங் பேட்டி

0
2889
- Advertisement -

காஞ்சனா படத்தால் தான் என்னுடைய வாழ்க்கையை போய்விட்டது என்று திருநங்கை பிரியா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். பின் இவர் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர் ஆனார். தற்போது இவர் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ருத்ரன். இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது ராகவா லாரன்ஸ் அவர்கள் ‘துர்கா’ என்ற பேய் படத்தில் நடித்து வருகிறார். ராகவா லாரன்சின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திர புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

- Advertisement -

ராகவா லாரன்ஸ் நடிக்கும் படங்கள்:

இதனை தொடர்ந்து இவர் 17 வருடங்கள் கழித்து உருவாகும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி. வாசு தான் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்ததாக கொடி புகழ் துரை செந்தில் குமார் இயக்கும் புகழ் படத்திலும் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படி ராகவா லாரன்ஸ் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

ராகவா லாரன்ஸ் பேய் படங்கள்:

இது ஒரு பக்கம் இருக்க, ராகவா லாரன்ஸ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது அவருடைய இயக்கத்தில், நடிப்பில் வெளிவந்த பேய் படங்கள் தான். இவர் முனி படத்தில் தொடங்கி காஞ்சனா 1 காஞ்சனா 2 காஞ்சனா 3 என்று தொடர்ந்து வித்தியாசமான கதைகளத்துடன் பேய் படங்களை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் காஞ்சனா படத்தால் தான் தன்னுடைய வாழ்க்கை அழிந்துவிட்டது என்று திருநங்கை பிரியா அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

காஞ்சனா படம்:

ராகவா லாரன்ஸ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காஞ்சனா. இது காமெடி கலந்த திகில் படம். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், கோவை சரளா, ராய் லட்சுமி, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தில் திருநங்கை வேடத்தில் சரத்குமாரின் மகளாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் பிரியா. அதற்கு பின் இவருடைய நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

திருநங்கை பிரியா அளித்த பேட்டி:

அதில் அவர், காஞ்சனா படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு. அந்த படத்திற்கு முன்பு நான் சாதாரண வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்தேன். அந்த படத்தில் நடித்ததனால் நான் கோடி கோடியாக சம்பாதித்து விட்டேன் என நினைக்கிறார்கள். ஆனால், அந்த படத்திற்கு பின் எனக்கு எந்த ஒரு பட வாய்ப்புமே கிடைக்கவில்லை. வேறு வேலை கூட எதுவும் பார்க்க முடியவில்லை என்று கண்ணீர் மல்க கூறி இருக்கிறார்.

Advertisement