திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் தன்னை ஆபாசமாக பேசிய பயில்வான் ரங்கநாதன் – கனிகா ஆவேசம்.

0
1069
kanika
- Advertisement -

தன்னை பற்றி தவறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகர் பயில்வால் ரங்கநாதனுக்கு அஜித்தின் வரலாறு பட நடிகை கனிகா கடுமையான தன் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். தமிழில் வில்லன் நடிகராக பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் பத்திரிகையாளராகவும் இருந்து வருகிறார். அதேபோல நடிகர்கள் நடிகைகள் குறித்தும் அடிக்கடி பல்வேறு சர்ச்சையான விஷயங்களை கூறி பிரபலமடைந்தவர் என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் இவர் சினிமாவில் வாய்ப்பை பெற பல நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து வருவதாவும், மேலும் வாய்ப்புகளை பிடிக்கவே தங்கள் சமூக வலைதளத்தில் பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுகின்றனர். அந்த காலத்தில் இருந்த நடிகைகள் எல்லாம் வெறும் திறமையை மட்டுமே நம்பி இருந்தார்கள். ஆனால், இப்போது இருக்கும் நடிகைகள் தங்கள் கவர்ச்சியை நம்பி இருக்கின்றனர்.

- Advertisement -

நடிகைகள் குறித்து ஆபாச பேச்சு :

பட வாய்ப்பை பெற உடலை காட்டி போட்டோ ஷூட்களை செய்து அதிலும் பணம் தேடுகிறார்கள் என்று அமலா பால், தமன்னா, ராஷ்மிகா, ஷாலினி பாண்டே, மாளவிகா மோகனன், ரெஜினா என்று பல முன்னணி நடிகைகளின் பெயரை சொன்னார் அதே போல கனிகாவையும் இந்த லிஸ்டில் சேர்த்து இருந்தார். இதை பார்த்த நடிகை கனிகா கடுப்பாகி இருக்கிறார்.

சினிமாவைப் பொருத்தவரை இளமை எல்லாம் நடிகர்களுக்கு மட்டும் தான் ஆனால் நடிகைகளைப் பொறுத்தவரை 40 வயதைத் நெருங்கினாலே அவர்கள் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுகிறார்கள் ஆனால் 40 வயதை கடந்தும் ஒரு சில நடிகைகள் தற்போதும் இளமையாக இருந்து வருகிறார்கள் அந்த வகையில் 37 வயதை நிறைவடைந்த நடிகை கனகாவும் ஒருவர். தமிழில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனிகா.

-விளம்பரம்-

பயில்வானின் கேவலமான பேச்சு :

கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வந்த 5 ஸ்டார் படத்தில் நடிகர் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்தார் கனிகா. தமிழில் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு ஆகிய படங்களில் நடித்தார் கனிகா. அதன்பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு தனது 26 வயதில் ஷியாம் ராதாகிருஷ்ணன் என்ற அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவரை பற்றி படு ஆபாசமாக பயில்வான் பேசி இருக்கிறார்.

கனிகா ஆவேசம் :

அவர் பேசிய அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிகா, இவர் மீது நான் எப்படி புகார் அளிப்பது. இவரின் அனைத்து வீடியோவிலும் ஆபாசங்கள் நிறைந்து இருக்கிறது. போலியான பத்திரிக்கையாளரை எப்படி புகார் செய்வது. பொதுவாக இது போன்ற மூன்றாம் தர பத்திரிக்கையாளர் கூறும் கருத்துக்களை நான் கண்டு கொள்வது இல்லை. ஆனால், இது எனக்கு வயிறு வரை எரிகிறது. சினிமா துறையில் இருக்கும் அனைத்து பெண்களையும் தவறாக காட்டுகிறார் இதை நம்பும் ஒரு கூட்டமும் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement