ஹோட்டலில் லட்ச கணக்கில் பில்லை ஏமாற்றி விட்டு தப்பி சென்ற சரத் குமார் பட நடிகை.!

0
523
Pooja-ghandhi

தமிழில் கடந்த 2006ம் ஆண்டு நடிகர் கரண் நடித்த ‘கொக்கி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா காந்தி. பெங்களூரைச் சேர்ந்த இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சுஷ்மா’ என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இவர் சரத்குமார் நடித்த வைத்தீஸ்வரன் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Image result for kokki movie

பிரபல நடிகையான இவர் தமிழ், மலையாளம், இந்தி, பெங்காலி என்று பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூரில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டல் நிறுவனம், பூஜா காந்தி மீது போலீசில் புகார் அளித்து இருந்தது. அந்த புகாரில் பூஜா காந்தி ஹோட்டலில் தங்கி விட்டு 4.5 லட்சம் ரூபாய் பணத்தை கட்டாமல் தப்பிச் சென்றதாக ஹோட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.

- Advertisement -

இதுகுறித்து அந்த ஹோட்டல் நிர்வாகம் கூறியதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை பூஜாகாந்தி எங்கள் ஹோட்டலில் தங்கி வந்தார். அவர் தங்கிய செலவு மற்றும் உணவு உண்ட செலவு ஆகியவை 4 லட்சத்துக்கு மேல் ஆகியுள்ளது. ஆனால், அதனை கட்டாமல் பூஜா காந்தி ஹோட்டலை காலி செய்து உள்ளார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் பூஜா காந்திக்கு சம்மன் அனுப்புகையில் அதற்கு விளக்கம் அளித்த பூஜா காந்தி தான் 2 லட்சம் தான் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ஆனால், அதனை ஹோட்டல் நிர்வாகம் மறுக்கவே, இரண்டு லட்சத்தை இப்போது கட்டுகிறேன் மீதி உள்ள பணத்தை கட்டுவதற்கு தனக்கு கால அவகாசம் வேண்டும் என்று ஹோட்டல் நிர்வாகத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளார் பூஜா காந்தி. அவரின் கோரிக்கையை ஏற்ற ஹோட்டல் நிர்வாகம், மீதி உள்ள பணத்தை இன்னும் சில காலத்தில் கட்டி விடுமாறு கூறியுள்ளனர். இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement