இயக்குனர் சுதாவின் இறுதி சுற்று படம் திருட்டு கதை என்ற தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக சுதா கொங்காரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் துரோகி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் மாதவன் நடிப்பில் வெளியாகியிருந்த இறுதிச்சுற்று படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த படத்தின் கதை திருட்டு என்ற தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. இறுதிச்சுற்று படத்தில் ரித்திகா சிங் பாக்ஸர் ஆக நடத்தி இருந்தார். உண்மையில் அந்த பெண்ணுடைய பெயர் துளசி ஹெலன். இவர் தமிழகத்தை சேர்ந்த பாக்ஸர் . அவருடைய அக்கா சரஸ்வதி. அவருடைய அக்கா போலீஸ் வேலைக்காக தான் பாக்ஸிங் கற்று இருந்தார். அக்காவை பார்த்து தான் தங்கை துளசிக்கும் பாக்சிங்கில் ஆர்வம் வந்தது.
சின்ன வயதிலேயே துளசி பாக்ஸிங்கில் தேசிய அளவில் போட்டியில் கலந்து கொண்டு பதங்கங்களையும் வென்றிருக்கிறார். மேலும், இறுதி சுற்று படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு இயக்குனர் சுதா அவர்கள் துளசியை சந்தித்து அவரிடம் பேசி இருக்கிறார். அப்போது துளசி பாக்ஸிங் துறையில் உள்ள பாலியல் அத்துமிரல்கள், அதனை எதிர்த்தால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன எல்லாத்தையும் கூறியிருக்கிறார். அதற்குப் பின் தான் இயக்குனர் சுதா இறுதிச்சுற்று படத்தை இயக்கியிருக்கிறார். அதோடு அந்த படத்தில் வரும் அனைத்து சம்பவங்களும் துளசி சொந்த வாழ்க்கையில் நடந்தது.
ஆக மொத்தம், இது சுதாவின் திருட்டு கதை தான். சுதா உண்மையாக நேர்மையானவராக இருந்தால் துளசியை தான் இந்த படத்தில் நடிக்க வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் நடிக்க வைக்காததற்கு காரணம், துளசி கருப்பாக இருக்கிறார் என்ற எண்ணத்தில் தான். பின் துளசி கதாபாத்திரத்தில் ரித்திகா சிங்கை நடிக்க வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் துளசியை நடிக்க வைக்கவில்லை என்றாலும் துளசியின் கதையை படமாக எடுக்க அவரிடம் முறையான அனுமதியும் வாங்கி இருக்க வேண்டும். ஆனால், சுதா அதையும் செய்யவில்லை.
படம் வெளிவந்த பிறகு தான் துளசிக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கிறது. அதற்கு பிறகு இவர் சுதாவை தொடர்பு கொண்ட போது, நான் பலபேரை இந்த படத்துக்காக சந்தித்தேன். எல்லோரும் நீ சொல்வதைப் போன்ற கதையை தான் சொல்கிறார்கள். அதையெல்லாம் வைத்து தான் எடுத்தேன் என்று கூறியிருந்தார். இதை சமீபத்தில் பேட்டியிலேயே துளசி வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். சுதா முழுக்க முழுக்க துளசியை ஏமாற்றி மோசடி செய்து இருக்கிறார் என்று சொல்லலாம்.
இந்த இறுதி சுற்று படம் சுதாவுக்கும், ரித்திகா சிங்குக்கும் ஒரு புதிய அடையாளத்தை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. தற்போது இதே கதையை தெலுங்கிலும் படமாக இருக்கிறார் சுதா. ஆனால், இந்த கதைக்கு சொந்தமான துளசி இன்னும் ஜிம்மில் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்.
தற்போது சூர்யா-சுதா கொங்காரா கூட்டணி மீண்டும் ஒரு படம் இயக்க இருப்பதாகவும், அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.