‘ஏன்டா டேய், எங்களுக்கெல்லாம் கோலங்கள் ஓலங்கள்னு போட்டுட்டு’ – சன் டிவி சீரியல் வீடியோவை கண்டு புலம்பும் 90ஸ் கிட்ஸ்கள்.

0
1229
kannana
- Advertisement -

கண்ணானே கண்ணே சீரியலின் ப்ரோமோவை பார்த்து 90 கிட்ஸ்கள் ஆதங்கத்தில் கமெண்டுகளை கொட்டித் தீர்த்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல்கள் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அந்த வகையில் மற்ற சேனல்களை விட சன் டிவியில் ஒளிபரப்பாகும் சேனல்களை எப்போதும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது.

-விளம்பரம்-

அதில் சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கண்ணான கண்ணே. இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. அப்பா-மகள் இடையேயான பாச போராட்டத்தை மையமாக கொண்ட தொடர். தெலுங்கில் ‘பௌர்ணமி’ என்ற டைட்டிலில் ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் தமிழில் ‘கண்ணான கண்ணே’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : மிருகத்த பாத்து கூட அவர் பயந்து இருக்கா மாட்டார் – பேர் கிரெல்ஸ்ஸிற்கு சரமாரியாக முத்தம் கொடுத்த ரன்வீர். கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.

கண்ணான கண்ணே சீரியல்:

மேலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சீரியல்களில் கண்ணான கண்ணே தொடரும் ஒன்று .இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் வெளிவந்தது. இந்த தொடரில் கதாநாயகனாக ராகுல் ரவி நடிக்கிறார். இவர் இதற்கு முன்பாகவே சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி என்ற தொடரில் நடித்து இருந்தார். பின் இவர் சாக்லேட் என்ற தொடரிலும் நடித்து இருந்தார். இந்த தொடரில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

கண்ணே சீரியலின் புரோமோ:

இவர்களுடன் இந்த தொடரில் பிரித்திவிராஜ், பிரீத்தி சஞ்சீவ், அக்ஷிதா உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த தொடரில் பிரீத்தி சஞ்சீவ் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து இருக்கிறார். தற்போது சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சன் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் கண்ணான கண்ணே சீரியலின் புரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

ப்ரோமோவில் வந்த காட்சி:

அதில், ஹீரோ- ஹீரோயின் இருவரும் மிக நெருக்கமாக இருப்பது போன்று ரொமான்ஸ் பாடலுக்கு நடனம் ஆடி இருக்கும் காட்சிகளை காட்டி இருக்கிறார்கள். இந்த ப்ரோமோ தான் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இதை பார்த்த 90 கிட்ஸ்கள் பலரும், ஏன்டா டேய் எங்களுக்கெல்லாம் கோலங்கள் ஓலங்கல்ன்னு போட்டுட்டு இப்படியெல்லாம் பண்றீங்களா என்று புலம்பித் தள்ளுகிறார்கள். அதிலும் சிலர், ஒரு காலத்தில் மிட்நைட் மசாலாவில் கூட இவ்வளவு கில்மா சாங்கை போடவில்லை.

90கிட்ஸ் சீரியல் ரசிகர்கள் கமெண்ட்ஸ்:

ஃபேமிலி சீரியல்ல போடுறீங்களே என்றும், நாங்க சீரியல் பார்த்த காலத்தில் கோலங்கள், மெட்டி ஒலி,சித்தி என்று சென்டிமென்ட் சீரியல்களை போட்டுட்டு இப்ப மட்டும் இப்படி லூட்டி அடிக்கிறார்களே நியாயமா? என்றெல்லாம் 90கிட்ஸ் சீரியல் ரசிகர்கள் பொங்கி எழுந்து கொந்தளிப்பில் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

Advertisement