மக்கா புனித பயணம் சென்ற போது இறந்த தாயார் – இயக்குனர் அமீருக்கு திரையுலகினர் ஆறுதல்.

0
543
ameer
- Advertisement -

இயக்குனர் அமீரின் தாயார் இறந்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமீர். இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். இவர் பொறியியல் படிப்பு படித்து முடித்து இருக்கிறார். இவர் ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-

பின் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த சேது மற்றும் நந்தா ஆகிய படங்களில் அமீர் பணியாற்றியிருக்கிறார். பின்னர் 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்து இருந்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார் அமீர். இந்த படத்தில் லைலா, திரிஷா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘ஏன்டா டேய், எங்களுக்கெல்லாம் கோலங்கள் ஓலங்கள்னு போட்டுட்டு’ – சன் டிவி சீரியல் வீடியோவை கண்டு புலம்பும் 90ஸ் கிட்ஸ்கள்.

அமீரின் திரைப்பயணம்:

இதனை இதற்குப் பிறகு இவர் ராம், பருத்திவீரன், ஆதிபகவன், பேரன்பு பல படங்களை இயக்கி இருந்தார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்து இருக்கிறது. இதில் பருத்திவீரன் படத்துக்காக இவர் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் கார்த்தியை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தது அமீர் தான்.

-விளம்பரம்-

அமீரின் பட தயாரிப்பு நிறுவனம்:

அது மட்டும் இல்லாமல் ப்ரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் இந்த படத்தின் மூலம் தான் கிடைத்தது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது இவர் Teamwork Production House என்ற பெயரில் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்து இருக்கிறார். இந்நிலையில் அமீரின் வீட்டில் நடந்துள்ள சோக சம்பவம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அமீரின் தாயார் இறப்பு:

அதாவது, அமீரின் தாயார் பாத்திமுத்து பீவி என்பவர் வயது முதிர்வு காரணமாக காலமாகியுள்ளார்.
தற்போது அமீர் அவர்கள் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் ஹஜ் புனித பயணம் சென்று இருக்கிறார். கடந்த 2ஆம் தேதி அவர் தன்னுடைய குடும்பத்தினருடன் மக்காவில் 16ம் தேதியுடன் அங்கு தங்குவதாக திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் அமீரின் தாயார் இறந்து இருக்கும் செய்தியை அடுத்து அமீர் இன்று மதுரை திரும்புகிறார்.

அமீர் தாயாரின் இறுதி சடங்குகள்:

இரவு திருச்சி விமான நிலையத்துக்கு வரும் அமீர் அங்கிருந்து கார் மூலமாக மதுரை செல்கிறார். அவரின் தாயார் இறுதி சடங்கு நாளை காலை 10 மணியளவில் மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல் மையவாடியில் நடைபெறுகிறது. மக்காவிலிருந்து அமீர் மதுரை திரும்பும் நிலையில் அவரின் மகள் மற்றும் மனைவி ஆகியோர் அங்கேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அமீரின் தாயார் மறைவுக்கு திரையுலகினர் பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement