ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் தான் கன்னத்தில் முத்தமிட்டால். இந்த சீரியலில் சமீபத்தில் 100வது எபிசோடு கடந்து வந்துள்ளது என்ற மகிழ்ச்சியை கொண்டாடும் விதத்தில் சீரியலில் நடிக்கும் குழுவினர் செட்டில் வைத்து கேக் வெட்டி 100 எபிசோடை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார். இந்த சீரியலில் தற்போது ஓடும் கள்ளக்காதல் கதைக்களமாக இருப்பதால் இந்த சீரியலுக்கு சற்று மவுஸ் அதிகமாகவே உள்ளது. இந்த சீரியலில் மாறன் மனைவி சாருமதி அகிலன் என்பவரை கள்ளதனமாக காதலித்து வருகிறார். அகிலன் ஆதிரா என்பவரை காதலிப்பதாக கூறி திருமணம் மேடை வரை இந்த கல்யாணம் செல்கிறது. கடைசி நிமிடங்களில் சாருமதியும் அகிலனும் வீட்டை விட்டு ஓடி செல்கின்றனர். குடும்பத்தினர் அனைவரும் ஆதிராவுக்கும் மாறனுக்கும் திருமணம் செய்வதாக உள்ளனர் இவ்வாறாக கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தில் இப்போது உள்ளது.
மனிஷா மேல் குற்றசாட்டு :-
கன்னத்தில் சத்தமிட்டால் சீரியலில் நாயகியாக நடிப்பவர் தான் மனிஷா அஜித் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஏற்கனவே ஒரு சீரியல் நடித்து வந்தார் ஆனால் சீரியலில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார் அது மட்டும் இல்லாமல் அடிக்கடி பிரச்சினை செய்து சீரியல்லிருந்து விலகி விடுவார் என்று கூறுகிறார்கள். தற்போது கன்னத்தில் முத்தமிட்டால் என்ற சீரியலில் இருந்து இவர் விலகியதாக அவர் மேல் பல குற்றச்சாட்டுகளை கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் குழு வைத்தனர். இப்படி ஒரு நிலையில் அவருக்கு பதிலாக பதினிகுமார் புதிய ஆத்திராவாக களமிறங்கி இருக்கிறார். ஏற்கனவே இந்த சீரியலில் இருந்து விலகியது குறித்து பேசிய மனிஷா அஜித் விளக்கம் கொடுத்துள்ளார் அவர் அவர் கூறுகையில் குழுவினரின் மேல் இவர் அதிக குற்றச்சாட்டு வைக்கின்றார் அதை விரிவாக காண்போம்.
சம்பளம் பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பார்கள் :-
நான் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் நடிக்க ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே எனக்கு சம்பள பாக்கி இருந்தது. என்னிடம் வந்து புரோடியுசர் பணம் பற்றாக்குறையாக இருக்கிறது அனைவரும் முழு தொகை சம்பளத்தை வாங்கிக் கொள்கிறார்கள் என்று என்னிடம் கூறுவார். எனக்கு அவரை பார்க்க பாவமாக இருந்தால் பாதி பணம் இப்பொழுது தாருங்கள் மீதி பணத்தை அப்புறமாக தாருங்கள் என்று அவரிடம் கூறினேன் அவரும் சரி என்று சொல்லிவிட்டார் பிறகு சிறிது நாட்கள் கழித்து நான் எனது சம்பளத் தொகையை கேட்கும் போது இன்னும் சேனலில் இருந்து பணம் தரவில்லை தந்தவுடன் தருகிறேன் என்று கூறினார். சேனலில் சென்று கேட்டதற்கு அனைவருக்கும் செட்டில் செய்து விட்டோம் என்று அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அப்பொழுது சிறியதாக பணம் மட்டும் கொடுத்து என்னை அலைய விடுவார்கள்.
100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தாலும் ஷூட்டிங் ஆழைப்பார்கள் :-
ஒரு நாள் கூட லீவ் என்று ஒன்றை தர மாட்டார்கள் கொரோனா காலகட்டங்களில் ஒரு நாள் லீவு கூட எடுக்காமல் தினசரி சீரியல் வந்து நடித்து விட்டு செல்வேன். அதன் பிறகு எனக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தாலும் சீரியலில் வந்து நடித்துக் கொடுத்துவிட்டு போங்க என்று சொல்வார்கள். இப்படியாக தொடர்ந்து ரெஸ்ட்டே இல்லாமல் சீரியலில் நடித்துக் கொண்டிருந்ததால் எனக்கு உடம்பு சரியில்லாமல் போனது அதற்காக நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டதற்கு பில்ளையும் அவர்களுக்கு அனுப்பி வைக்க நான் அனுப்பி வைத்ததற்கு கூட திரும்ப எந்த வித பதிலும் அவர்கள் அளிக்கவில்லை. 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் வந்து மருத்துவமனையில் சேர்ந்து இருந்த பொழுது அவர்களுக்கு மெயில் அனுப்பி தகவல் சொல்லிட்டேன் ஆனால் எனக்கு பதில் மெயிலாக நாளைக்கு ஷூட்டிங் இருக்கு வந்து விடுங்கள் என்று அனுப்பி இருந்தார்கள்.
600000 எனக்கு சம்பள பாக்கி :-
ஷூட்டிங் எடுக்கும் செட்டும் பாதுகாப்பு அற்ற முறையில் தான் இருக்கும். அங்கிருந்த வயரின் மூலமாக ஷாக் அடிப்பது சகஜமாக நடக்கும் ஒன்று அப்பொழுது கூட அவர்கள் எனக்கு என்ன ஆயிற்று என்று கவனிக்காமல் சூட்டிங்கிலேயே குறியாக இருப்பார்கள். மேலும் அங்கு இருக்கும் பொருள்கள் பாதுகாப்பான முறையில் இருக்காது எப்பொழுது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் சூழ்நிலையில் தான் இருக்கும். என் அசிஸ்டன்ட்க்கு பேட்டா பணம் அனுப்புவார்கள். ஆனால் எனக்கு வந்து போகும் கேபிற்கு பணம் கொடுக்க மாட்டார்கள். எனக்கு இதுவரைக்கும் ஆறு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பள பாக்கி உண்டு. ரெஸ்ட் இல்லாமல் ஷூட்டிங் எடுப்பதால் என் உடம்பு பாதிப்புக்கு உள்ளாகிறது. நான் சீரியலில் இருந்து விலகுகிறேன் என்று கூறிய போது அப்பொழுது கூட நீங்கள் விளங்கினா டிஆர்பி பாதிக்கப்படும் இன்று சேனல் மீது கவனம் செலுத்துகிறார்கள்.
சீரியலில் இருந்து அவர்கள் தான் விலக்கி விட்டனர் :-
இப்படி பல பிரச்சினைகள் எல்லாம் வைத்து கொண்டுதான் சீரியல் நடித்து வந்தேன். அப்பொழுது 100 வது நாள் எபிசோட் கொண்டாடி விட்டு வீட்டிற்கு சென்றவுடன். நீங்கள் சீரில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் உங்கள் உடல்நிலை சரியில்லை என்று சொல்கிறீர்கள் நாங்கள் வேறு ஆள் பார்த்துக் கொண்டோம் என மெயில் பண்ணி அனுப்பி இருந்தார்கள். நான் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது கூட என்னிடம் சொல்லாமல். நான் வீட்டிற்கு சென்றவுடன் என்னிடம் சொல்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள் நான் பிரச்சனை பண்ணி விலகுகிறனா இல்லையா என்று. கலர்ஸ் தமிழில் கூட சீரியல் செய்யும்போது எனக்கு கோவிட் தொற்று இருந்ததால் தான் அங்கிருக்கும் வேற யாருக்கும் பரவி விடக்கூடாது என்பதால் தான் அந்த சீரியலில் இருந்து நான் விலகினேன். ஆனால் இங்கு இருக்கும் அனைவரும் என்னை தான் குற்றம் சாட்டுகிறார்கள் நான்தான் பிரச்சனை செய்கிறேன் என்று கூறுகிறார்கள் என் மனிஷா அஜித் கூறுகிறார்.