என் தங்கச்சி பையன் என் மேல கொல காண்டாகிட்டான் – கர்ணன் படத்தால் நட்டி போட்டுள்ள பதிவை பாருங்க.

0
79890
karnan
- Advertisement -

‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘கர்ணன்’ இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார்.

இதையும் பாருங்க : நாங்கள் இனி கணவன் – மனைவி இல்லை. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பகல் நிலவு தம்பதிகள்.

- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக தமிழ் நாட்டில் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவிகித கட்டுப்பாடு என பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி, கர்ணன் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி வரை வசூல் செய்திருக்கும் இப்படம், தனுஷின் கரியரில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்ற படம் எனும் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் கண்ணபிரான் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாகி மிரட்டி இருக்கிறார் நட்டி.

கொடூர போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நட்டிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கொஞ்சம் நாட்களுக்கு தியேட்டர் பக்கம் போக வேண்டாம் என்றும் இவரது தங்கை மகன் கூறியுள்ளாராம். அதே போல இவரது கதாபாத்திரத்தால் பலரும் இவரை திட்டி மெசேஜ் செய்து வருவதால் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ள நட்டி, என்ன திட்டாதீங்க எப்போவ், ஆத்தோவ், அண்ணோவ், கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன். போன் மெசேஜ்ல திட்டாதீங்கப்பா. முடியிலப்பா, அது வெறும் நடிப்புப்பா, ரசிகர்களுக்கு எனது நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement