நடிகையின் இடுப்பில் கை வைத்த எடியூரப்பா. சர்ச்சையை கிளப்பிய வீடியோ.

0
1624
ediyurappa
- Advertisement -

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முக்கிய ஆறுகளிலும், கிளை ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதுகாவிரி நதியால் அணைகள் நிரம்பியதால் முதல்வர் எடியூரப்பா காவிரி ஆற்றுக்கு நன்றி தெரிவித்து மரியாதை செலுத்தினார்.மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டிணம் அருகே உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு சென்ற முதல்வர் எடியூரப்பா மலர் தூவி காவேரியை வணங்கினார்.

-விளம்பரம்-

பிறகு அரிசி, பழங்கள், பூக்கள், புடவை உள்ளிட்டவற்றை வைத்து காவிரி ஆற்றுக்கு மரியாதை செலுத்தினார். பிறகு மைசூருவில் உள்ள கபினி அணைக்கு சென்று அங்கும் காவிரி ஆற்றுக்கு முதல்வர் எடியூரப்பா மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது எடியூரப்பாவுடன் நடிகையும் எம் பியுமான சுமலதாவும் சென்று இருந்தார்.இந்த நிலையில் இந்த நிகழ்வின் போது முதலமைச்சர் எடியூரப்பா, நடிகை சுமலதா இடுப்பில் கை வைத்ததாக சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

அந்த வீடியோவில் நடிகை சுமலதா இடுப்பில் எடியூரப்பா கை வைத்ததும், நடிகை சுமலதா, எடியூரப்பாவிடம் ஏதோ சொல்கிறார். பின்னர் இடுப்பில் இருந்து கையை எடுத்து விடுகிறார் எடியூரப்பா. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கர்நாடகத்தில் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் சட்டம், விவசாய நில சீர்த்திருத்த சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சட்ட திருத்தங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், விவசாய நிலங்கள் பெரும் முதலாளிகளின் கைவசம் சென்றுவிடும் என்று இந்த திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எடியூரப்பா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மைசூரு, மண்டியாவில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. இப்படி ஒரு நிலையில்

-விளம்பரம்-
Advertisement