கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேத்தி தூக்கிட்டு தற்கொலை – மருத்துவருக்கே இப்படி ஒரு விதமான மன அழுத்த பிரச்சனையா ?

0
559
ediyurappa
- Advertisement -

எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே பிரபலங்கள் பலர் காரணம் இன்றியும், மன வேதனை, காதல் தோல்வி, மன அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து பல பிரபலங்கள் இறந்து உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமானவர் எடியூரப்பா.

-விளம்பரம்-

இவருடைய பேத்தி சௌந்தர்யா. இவருக்கு தற்போது 30 வயது ஆகிறது. எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவிதி. இவர் மகள் தான் சௌந்தர்யா என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரில் உள்ள எம் எஸ் ராமையா மருத்துவமனையில் மருத்துவராக சௌந்தர்யா இருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் பணியாற்றிய சக மருத்துவர் நிரஞ்சனை காதலித்து பின் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆறு மாத குழந்தை உள்ளது.

- Advertisement -

எடியூரப்பா பேத்தி தற்கொலை:

பெங்களூருவில் உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரிக்கு அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சௌந்தர்யா தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை சௌந்தர்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இன்று காலை தனது அறைக்கு சென்ற சௌந்தர்யா நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை. அப்போது வீட்டில் பணிபுரிபவர்கள் கதவை தட்டி உள்ளனர். கதவு தட்டியும் சௌந்தர்யாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

தகவல் அறிந்து வீட்டுக்கு வந்த கணவர்:

பின்னர் அவருடைய கணவரை தொலைபேசியில் அழைத்து நடந்த சம்பவத்தை வீட்டில் பணிபுரிந்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த தகவல் அறிந்து வீட்டுக்கு கணவர் விரைந்து வந்தார். ஆனால், அதற்கு முன்பே அவர் தொலைபேசியில் மனைவியை அழைத்து இருக்கிறார். சௌந்தர்யாவிடம் இருந்து பதில் வரவில்லை. சுமார் 10 மணி அளவில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார். பின் அவரிடம் இருந்த மற்றொரு சாவி மூலம் வீட்டை திறந்தார். அப்போது மின்விசிறியில் சௌந்தர்யா தூக்கில் தொங்கியதை கண்டு எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

-விளம்பரம்-

சௌந்தர்யா தற்கொலை:

பின் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசிடம் தகவல் கொடுத்து இருக்கிறார்கள். மேலும், இவருடைய மரணம் எடியூரப்பா குடும்பத்தினரருக்கும், மாநில பாஜகவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த தகவல் அறிந்த உடன் கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை தன் அமைச்சர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்து சென்று எடியூரப்பா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் போலீசார் வழக்கு பதிவு செய்து சௌந்தர்யா தற்கொலைக்கு காரணம் என்ன? என்று தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறியிருப்பது:

தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் பலவிதமாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறியிருப்பது, பிரசவத்திற்கு பிந்தைய உடல்நலன் சார்ந்த மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் சௌந்தர்யாவுக்கு இருந்து வந்தது. சௌந்தர்யாவின் உடல் நலன் பாதிப்பு எங்கள் அனைவருக்குமே நன்றாக தெரியும். இதில் சந்தேகம் எதுவும் இல்லை. சௌந்தர்யாவும் அவரது கணவரும் நல்ல தம்பதிகளாக தான் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி இருந்தார்.

Advertisement