அகரம் விழாவில் விஜய்யின் செயல் குறித்து பாராட்டி பேசிய கார்த்தி – வைரலாகும் வீடியோ

0
1568
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து சூர்யா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் சினிமா உலகின் நடிப்பைத் தாண்டி பல உதவிகளையும் சமூகத்திற்கு செய்து வருகிறார். விவசாயிகளுக்கு உதவுவது, கல்வி கற்க முடியாத நிலையில் வாழ்க்கையில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி போன்ற பல நற்பணிகளை செய்து கொண்டு வருகிறார். இதை எல்லாம் இவர் அகரம் அறக்கட்டளையின் மூலம் செய்கிறார். 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் அகரம் அறக்கட்டளை. தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பது தான் இந்த அறக்கட்டளையின் நோக்கம்.

- Advertisement -

அகரம் அறக்கட்டளை :

அனைவருக்கும் கல்வி வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் நிறுவனர் நடிகர் சூர்யா, சிவகுமார் ஆவார். இதற்கு சினிமா பிரபலங்கள் சார்பாகவும், அரசியல் சார்பாகவும் பலர் இந்த அகரம் அறக்கட்டளைக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இதை ஏற்கனவே நடிகர் சிவக்குமார் அவர்கள் பல வருடங்களாக செய்த நிலையில் நடிகர் சூர்யாவும் இதை எடுத்து செய்து வருகிறார்.

44 வது சிவகுமார் கல்வி விருதுகள் :

சமுதாயத்தின் பின் தங்கி உள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களை தேடி அவர்களுக்கான நிதி உதவி வழங்க பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார் நடிகர் சூர்யா. இதில் பல பேர் தற்போது நல்ல வேலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் அகரம் ஃபவுண்டேஷன் சார்பாக 44 வது சிவகுமார் கல்வி விருதுகள் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி கலந்து கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் சூர்யா சொன்னது:

அப்போது சூர்யா கூறியிருந்தது, எல்லோருக்கும் சமூக பொறுப்பு ,சமூக அக்கறை இருக்க வேண்டும். ஒருவருக்கு உதவி செய்தால் அது வேர் போல பரவும். ஜாதி மதத்தை கடந்து வாழ்க்கை புரிந்து கொள்ளுங்கள். வழி சொல் பேசி விடாதீர்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்க கூடாது. கல்வி மூலம் வாழ்க்கையை பாருங்கள். வாழ்க்கை மூலம் கல்வியை பாருங்கள். வாழ்நாள் முழுவதும் கல்வியே முக்கியம். அகரம் மூலம் பலரது வாழ்க்கை முழுமை அடைவது நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

கார்த்தி அளித்த பேட்டி:

இதை தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்து கார்த்தி பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவரிடம் தளபதி விஜய் பயிலகம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு கார்த்தி, எனக்கு ரொம்ப சந்தோஷம். ரொம்ப அருமையான விஷயம். எவ்வளவு பண்ணாலும் இங்க பத்தாது. காரணம், இங்கு எவ்வளவோ தேவை இருக்கிறது. விஜய் அண்ணாவும் பண்றது நினைத்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

Advertisement