‘சர்தார்’ பட கதைய கேட்ட நாள் முதலே தண்ணி விஷயத்தில் நான் அதை தான் செய்து வருகிறேன் – கார்த்தி.

0
404
sardar
- Advertisement -

சர்தார் படத்தினால் நான் இப்படி மாறி விட்டேன் என்று கார்த்தி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் ‘பருத்தி வீரன்’ என்ற படம் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘விருமன்’ . இந்த படம் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலில் வாரி குவித்து இருக்கிறது. அதோடு பாக்ஸ் ஆபிஸிலும் இந்த படம் இடத்தை பிடித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து கார்த்தி பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குநர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு ஆன ‘பொன்னியின் செல்வன்’ படம் செப்டம்பர் மாதம் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

சர்தார் படம்:

இந்த படமும் உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் சர்தார். இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கார்த்தி, ராஷிகா கண்ணா, ரஜியா விஜயன், லைலா, முனீஸ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

படத்தின் விமர்சனம்:

பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் கார்த்தியின் சர்தார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் இரட்டை வேடத்தில் கார்த்திக் நடித்திருக்கிறார். அதில் அப்பா கார்த்தி ராணுவ உளவாளியாக இருக்கிறார். மகன் கார்த்தி போலிஸ் அதிகாரியாக இருக்கிறார். படத்தில் தண்ணிர் ப்ரச்சனை குறித்து பேசப்படுகிறது. நோய்க்கு காரணம் தண்ணீர் இல்லை, வாட்டர் பாட்டிலில் தான் பிரச்சனை என்று கூறப்படுகிறது. தண்ணீர் பிரச்சனையை கையில் எடுத்து இயக்குனர் கதையைக் கொண்டு சென்ற விதம் சிறப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-

கார்த்தி அளித்த பேட்டி:

இந்நிலையில் சர்தார் படம் குறித்து கார்த்தியும், பட குழுவினரும் பேட்டி ஒன்று அளித்திருந்தார்கள். அதில் தண்ணீர் பாட்டில் பிரச்சனை குறித்து கேட்ட கேள்விக்கு கார்த்தி கூறியிருந்தது, நான் அமெரிக்காவில் இருந்து இருக்கிறேன். அங்கெல்லாம் தண்ணீர் கேட்டால் கூலிங் தண்ணீர் தான் கொடுப்பார்கள். சாதாரணமாக இருக்கும் தண்ணீரை கொடுக்க மாட்டார்கள். காரணம், பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள நச்சுக்கள் தண்ணீரில் கலந்து விடும் என்ற காரணத்தினால் அமெரிக்காவில் எல்லாம் தண்ணீரை ஃப்ரிட்ஜில் தான் வைத்திருப்பார்கள்.

பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் குறித்து சொன்னது:

ஆனால், அதை நம்முடைய நாட்டில் பாலோ செய்வது கிடையாது. பொதுவாகவே நாம் வெளியில் செல்லும்போதும் தண்ணீர் நம்மால் கொண்டு செல்ல முடியும். ஆனால், எல்லோரும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை தான் வாங்கிக் குடிக்கிறோம். இதை எல்லோருமே வழக்கமாக வைத்து விட்டார்கள். நான் இப்போது 10 லிட்டர் வாட்டர் பாட்டிலை எங்கு சென்றாலும் எடுத்துக்கொண்டு தான் செல்கிறேன். இந்த படத்தின் கதையை பி எஸ் மித்திரன் கூறும்போது நான் இதை செய்ய ஆரம்பித்து விட்டேன். ஆனால், என்னுடைய மனைவி இதற்கு முன்பிருந்தே தண்ணியை எடுத்துக் கொண்டுதான் செல்வார்கள். தண்ணீரை நாம் முடிந்த வரைக்கும் எடுத்துக் கொண்டு செல்வதன் மூலம் நோயிலிருந்து தவிர்க்கலாம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement