தவறு செய்தவர்களுக்குத் தான் வலிக்கும் – தமிழிசையின் ட்வீட்டுக்கு கார்த்திக் நரேன் பதிலடி!

0
1220
Tamilisai - karthick naren
- Advertisement -

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மெர்சல்’. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

இது தொடர்பாக தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார் .மெர்சல் படத்தில் நடிகர் விஜய் 5 ரூபாய் டாக்டர் பெறவேண்டும் மற்றும் போலி டாக்டர்களை விமர்ச்சிப்பது போல ஒரு காட்சி இப்படத்தில் உள்ளது .இதுவும் தவிர்த்து மருத்துவர்களை இழிவு படுத்துவதாக உள்ளதாக தமிழிசை ஒரு டிவிட் செய்து உள்ளார்.
Tamilisai அவர் டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:
மெர்சல் அர்ப்பணிப்போடு வேலை செய்யும் மருத்துவர்களை கேலி பேசுகிறது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை ஊழல்வாதிகளாகக் காட்டுகிறது. மருத்துவர்கள் 5 ரூபாய் கட்டணம் எடுத்துக்கொள்ள வேண்டும் அதே வேளையில் நடிகர்கள் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குவார்களா?” என்று பதிவிட்டார்.இந்த ட்வீட்டிற்கு இயக்குநர் கார்த்திக் நரேன் பதிலடி கொடுத்துள்ளார்.

துருவங்கள் 16″ படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் அவர் கூறியதாவது.
Karthick Naren“தவறு செய்தவர்களுக்குத் தான் வலிக்கும். ஏன் சில அரசியல்வாதிகள் நடிகர்களை விட அதிகப் பணம் சம்பாதிக்கிறார்களே. அவர்களை கேட்கலாமே?” என்று தெரிவித்துள்ளார்

Advertisement