பேட்ட படத்தை போல ஜகமே தந்திரம் படத்திலும் தனது மனைவியை நடிக்க வைத்துள்ள கார்த்திக் சுப்புராஜ்.

0
5927
jagam
- Advertisement -

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’ நேற்று (ஜூன் 18) Netflix Ott தளத்தில் வெளியாகி இருந்தது.லண்டனில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அகதிகளை அந்த நாட்டில் இருந்து விரட்ட கேங்ஸ்டர் கும்பல் ஒன்று செயல்பட்டு வருகிறது.அவர்களுக்கு எதிராகவும் ஈழத்தமிழகர்கள் மற்றும் புலம்பெயர் மக்களுக்கு ஆதரவாக ஒரு தமிழர் போராடுகிறார்.

-விளம்பரம்-

அவரை மதுரை தமிழரான தனுஷை வைத்து கொள்கின்றனர். பின்னர் தனுஷ், அந்த தமிழ் போராளியின் வரலாற்றை தெரிந்து கொண்டு லண்டன் தாதாவை எதிர்த்து போராடுகிறார். தொடர்ந்து கேங்ஸ்டர் கதைகளை எடுத்து வந்த கார்த்திக் சுப்புராஜ், இந்தமுறை இனவெறி அரசியலையும் புலம்பெயர்ந்து செல்பவர்களின் பிரச்சனையையும் சேர்த்து இந்த படத்தில் காண்பித்து உள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

- Advertisement -

இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மனைவி நடித்துள்ள விஷயம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக கார்த்திக் சுப்புராஜ் படத்தில் குறிப்பிட்ட நபர்கள் கண்டிப்பாக வந்து விடுவார்கள். அதிலும் அவரது அப்பா கண்டிப்பாக ஏதாவது ஒரு முக்கிய கதாபத்திரத்தில் வந்துவிடுவார்.

அதிலும் பேட்ட படத்தில் தனது அப்பா மற்றும் மனைவி இருவரையுமே நடிக்க வைத்து இருப்பார் கார்த்திக் சுப்புராஜ். பேட்ட படத்தில் ஒரு காட்சியில் ஹாஸ்டர் வார்டனாக ரஜினி சேரும்போது அவரிடம் ஒரு பெண் அப்பாய்ண்ட்மெண்ட் கொடுப்பார். அவர்தான் கார்த்திக் சுப்பராஜின் மனைவி. அதே போல இந்த படத்திலும் கார்த்திக் சுப்புராஜின் மனைவி ஒரு சிறு காட்சியில் தோன்றி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement