தந்தையர் தினத்தில் தனது தந்தையின் நினைவு நாள் – ஆரவ்வின் கண்ணீர் பதிவு.

0
756
- Advertisement -

இன்று தந்தையர் தினத்தில் மறைந்த தனது தந்தை குறித்து ஆரவ் உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சீசன் ஆக இருந்து வருகிறது இந்த சீசனில் பங்குபெற்ற பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடிகர் நடிகைகளாக ஜொலித்து வருகிறார்கள்.அந்த வகையில் நடிகர் ஆரவ்வும் ஒருவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ்.

-விளம்பரம்-

ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியா இவர் மீது தீராத காதலில் இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை ராஹி என்பவரை தான் ஆரவ் திருமணம் செய்து கொண்டார்ஆரவ். நடிகை ராஹி, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இமை போல் காக்க’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.நடிகர் ஆரவ் மற்றும் ராஹியின் திருமணம்கடந்த , செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.

- Advertisement -

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சரண், ரஞ்சித் ஜெயக்கொடி, வருண், ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆரவ் திருமணம் முடிந்த சில மாதங்களில் அவரது தந்தை டிசம்பர் 20 ஆம் தேதி காலமாகி இருந்தார். இதுகுறித்து பதிவிட்ட ஆரவ், கடந்த இரண்டு மாதமாக அவர் பட்ட கஷ்டங்களை நாங்கள் பார்த்து தவித்தோம். எங்கள் வாழ்வில் வெற்றிடத்தை உண்டாகி விடீர்கள் அப்பா.

இந்த இழப்பில் இருந்து எப்படி மீளப்போகிறேன் என்பது தெரியவில்லை. எங்கிருந்தாலும் எங்களை ஆசிர்வதியுங்கள் என்று உருக்கமுடன் பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இன்று (ஜூன் 20) தந்தையர் தினத்தில் தனது தந்தை இறந்து சரியாக 6 மாதம் ஆகிவிட்டது என்று மிகவும் உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். மேலும், சிறு வயதில் தனது தனத்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement