வடசென்னை படத்திற்குப் பிறகு வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி மீண்டும் இணையும் படம் அசுரன். இப்படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மலையாளத்தில் பிரபலமான நடிகையாக மஞ்சு வாரியர் , நடிகர் திலீப்பைக் காதல் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர்.
வட சென்னை ஆடியோ விழாவில் பேசிய தனுஷ், வடசென்னையை மூன்று பாகமாக எடுக்க உள்ளோம். ஆனால் அதற்கு முன்னதாக நானும் வெற்றிமாறனும் இணைந்து வேறு ஒரு படம் எடுக்க இருக்கிறோம் என்று தெரிவித்து இருந்தார். பிறகு அசுரன் என்ற தலைப்பையும் தனுஷ் வெளியிட்டார்.
அதன்படி அசுரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கியது. இதனையடுத்து இரண்டு படத்தின் இரண்டு போஸ்டர்களும் வெளியாகின. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் துவங்கியுள்ளது. இந்த படத்தில் காமெடி நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் நடிக்கிறார்.
சமீயத்தில் அசுரன் பட்டப்படிப்பு தளத்தில் கருணாஸ் மகன்
கென் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் லுங்கி மற்றும் சட்டையில் கையில் அரிவாளுடன் அமர்ந்துகொண்டிருக்கிறார்
கென். தற்போது இந்த புகைப்படம் இணையத்தின் வைரலாக பரவி வருகிறது.